Pushpa 2: கேமிராவே கழுத்துக்கு கீழேதான் இருக்கு! டம்மி பீஸாக்கிய பகத்.. புஷ்பா 2 பற்றி புட்டு புட்டு வைக்கிறாரே

pushpa2
Pushpa 2: நேற்று அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே படம் 175 கோடி கலெக்ஷனை அள்ளியிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் அழாத குறையாக படத்திலுள்ள குறைகளை சொல்லியிருக்கிறார்.
புஷ்பா முதல் பாகத்தில் அமைந்துள்ள ஊ சொல்றியா பாடலையும் புஷ்பா 2 படத்தில் அமைந்த பீலிங்ஸ் பாடலையும் கம்பேர் பண்ணி பாருங்க.படம் முடிஞ்சும் வல்காரிட்டி பீலிங்ஸ் பாடலில் இருக்கிறது .கிளாமர் காட்ட வேண்டியதுதான். அதுக்காக இப்படியா. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருமே தியேட்டர் வந்து படம் பார்க்கிறோம்.
இதையும் படிங்க: அஜித் படத்தால் தமிழ் க்ளோஸ்… அல்லு அர்ஜூனால் தெலுங்கில் காலி… என்ன சேதி தெரியுமா?
பப்ளிக் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள் என சொல்றாங்க. படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு காமன் சென்ஸ் வேண்டும். ஒரு படம் எடுக்குறீங்க அப்படின்னா ஒரு பத்து பேர் பார்க்கிற மாதிரி எடுக்கணும். அவ்வளவு கேவலமா எடுத்து இருக்கீங்க. வுமன் சேப்டி பற்றி படத்துல பேசுறீங்கனா முதலில் நீங்க வுமன எப்படி நடத்தனும்?
லேடிஸ் ஓட எல்லா அந்தரங்க விஷயத்தை காட்டுறீங்க. ஸ்கிரீன்ல பாத்தீங்கனா கழுத்துக்கு கீழே தான் கேமராவை இருக்கிறது. இது வுமன் சேப்டியா? இந்த ஒரு வீடியோவை பார்த்துட்டு 10 பேர் கை புடிச்சு இழுப்பானா இல்ல வுமன் சேப்டின்னு கை புடிச்சு கூட்டிட்டு போய் விடுவானா? இந்த மாதிரி தப்பான விஷயத்தை கொண்டு வரக்கூடாது .
பாத்துட்டு சும்மா ரசிச்சிட்டு போலாம்னு சொல்லலாம் .உடம்பை காட்டுறது ரசிப்பா ?இதே மாதிரி ஃபர்ஸ்ட் பார்ட்டில் சமந்தா டான்ஸ் ஆடினாங்க. அதில் அவங்க உடம்ப எக்ஸ்போஸ் பண்ணி இருக்கவே மாட்டாங்க. பகத் பாசிலுக்காக தான் இந்த படத்தையே பார்க்க வந்தேன். ஆனால் இந்த படத்தில் அவர் ஒண்ணுமே பண்ணல. டம்மி பீஸா மாத்தி இருக்காங்க.
இதையும் படிங்க: வீட்டுல விசேஷமுங்கோ!.. கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான செய்தி சொன்ன விஜே மணிமேகலை..!
ஒரு ஹீரோவாகவே இருக்கட்டும். அதுக்காக பகத் மீது யூரின் போறதெல்லாம் பார்க்கத் கேவலமா இருக்கு. இந்த 20 நிமிடத்தில் அவரை ஒரு ஜோக்கராகத்தான் நான் பார்த்திருக்கிறேன். சென்டிமென்ட் என பெரிய அளவில் இல்லை. கடைசி இரண்டு நிமிடங்கள் மட்டும்தான் சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அது போக கடைசியில் அந்த ஃபேமிலி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதைத்தான் படத்தில் காட்டி இருக்கிறார்கள். அதைத் தவிர படம் முழுக்க சென்டிமென்ட் என்பது கிடையாது என கூறியிருக்கிறார்.