எப்பா தொகுதில வேலையே இருக்காதா?.. உதயநிதி பற்றிய ரசிகரின் கேள்விக்கு சாட்டையடி பதிலளித்த பிரபலம்...

uthayanithi
சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தன் பங்களிப்பை நல்ல முறையில் கொடுத்து வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். முதலில் தயாரிப்பாளராக களமிறங்கிய உதயநிதி ஒரு சில படங்களை தயாரித்து வந்தார். அதன் பின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.
அடிப்படையிலேயே நகைச்சுவை உணர்வு கொண்ட உதயநிதிக்கு அந்த படம் பெரிய அளவு ஹிட் கொடுத்தது. ஏனெனில் முழுக்க முழுக்க காமெடி படமாகவே அமைந்த ஓகே ஓகே படம் இவரின் நகைச்சுவையும் சுமந்து மக்கள் மனதில் நல்ல முறையில் பதிந்தது.

uthayanithi
இதையும் படிங்க : சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த பெப்சி விஜயன்!.. மனுஷன் காண்டாகி என்ன பண்ணாரு தெரியுமா?..
அதன் காரணமாகவே தொடர்ந்து காமெடி படங்களிலேயே நடித்து மேலும் நல்ல வரவேற்பை பெற்றார் உதயநிதி. இது போதும்.கொஞ்சம் நம்ம ரூட்டை மாற்றலாம் என கருதி மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற அவரின் உண்மையாக கேரக்டருக்கு செட் ஆகாத படங்களில் நடித்து நல்ல வெற்றியை பெற்றார்.
அந்த மூன்று படங்களும் உதயநிதிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தன. தொடர்ந்து வெளியான கழகத்தலைவன் படமும் ஓரளவு வரவேற்பை பெற்று வருகின்றன. இதனிடையில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணி ஆற்றி வருகிறார் உதய நிதி. மேலும் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகின்ற முக்கால் வாசி படங்கள் இவரின் கட்டுப்பாட்டிலேயே ரிலீஸ் ஆகி நல்ல வெற்றியை பெற்று வருகின்றது.

uthayanithi
அதன் மூலம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அரசியலில் இருக்கும் ஒருவர் அதுவும் எம்.எல்.ஏ வாக இருக்கும் ஒருவர் எப்படி வாரத்திற்கு இரண்டு படங்களை பார்க்க முடிகிறது? அவருக்கு தொகுதியில் வேலை இருக்காது ? என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
மேலும் உதய நிதி சமீபத்தில் நடக்கின்ற அனைத்து சினிமா விழாக்களிலும் கலந்து கொள்கிறார். மேலும் சமீபத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கின்றன. அதையும் உடனுக்குடனே பார்த்து விடுகிறார். இது மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு எம்.ஏல்.ஏ.வாக இருந்து கொண்டு எப்படி இவரால மட்டும் இத்தனை படங்களை பார்க்க முடிகிறது என்ற எண்ணம் பிறந்திருக்கின்றது.
இதையும் படிங்க : ”தனுஷ் எங்கள் மகன் தான்” மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்…
இதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் எல்லாம் அவரின் தாத்தாவான கருணாநிதியின் இரத்ததில் இருந்து வந்த நல்லொழுக்கம் தான். அவர் தன் வாழ்நாளில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கக்கூடியவர். அது சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியம் தான். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்லி முடித்தார் சித்ரா லட்சுமணன். இறக்கும் தருவாய் வர தன் வாழ் நாள் முழுவதையும் அரசியல், சினிமாவில் கதை எழுதுவது என வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தவரின் இரத்தத்தில் இருந்து வந்த வாரிசு எப்படி இருக்கும்?

chithralakshmanan