STR: 40 years of STR!... ஃபுல்லா கூஸ்பமஸ் தான்!.. வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவிட்ட ரசிகர்கள்...!!

by ramya suresh |   ( Updated:2024-11-08 14:05:48  )
STR: 40 years of STR!... ஃபுல்லா கூஸ்பமஸ் தான்!.. வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவிட்ட ரசிகர்கள்...!!
X

#image_title

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 40 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் உருவாக்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி ராஜேந்திரன் அவரின் மகனாக சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார்.

தனது தந்தை இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிம்பு தற்போது சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய 'காதல் அழிவதில்லை' என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: Mahanathi: சன் டிவியில் கிடைத்த பெத்த வாய்ப்பு!… விஜய் டிவியின் மகாநதி சீரியலை கழட்டிவிட்ட பிரபல நடிகை?!…

அதன் பிறகு தம், அலை, கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி என தொடங்கி கடைசியாக பத்து தல என்ற திரைப்படத்தில் வரை நடித்திருக்கின்றார். சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர் மற்றும் சிறந்த டான்ஸராகவும் அறியப்பட்டார். தொடர்ந்து சினிமாவில் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த நடிகர் சிம்பு இடையில் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

அதை தொடர்ந்து படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளாமல் நடிகர் சங்கம் சார்பாக ரெக்கார்ட் கொடுக்கப்பட்டது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சிம்பு உடல் எடை கூடி படங்களில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இப்படி பல பிரச்சினைகள் இவரை சுற்றி வளம் வர சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து மாநாடு என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

simbu

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இதையும் படிங்க: Keerthy Suresh: கார் ரேஸில் குதித்த கீர்த்தி சுரேஷ்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? வைரலாகும் வீடியோ

மேலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கின்றார். இப்போது நடிகர் சிம்பு தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். நடிகர் சிம்பு சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 40 ஆண்டுகளான நிலையில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும் நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்த படங்கள் அனைத்தையும் சேர்த்து அதில் சிம்பு பேசும் வசனங்களையும் இணைத்து ஒரு வீடியோவாக தயார் செய்து இணையதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சிம்பு ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

Next Story