போயாபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலையா நடித்து வெளியான அகாண்டா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இன்று காலை இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதேநேரம் நேற்று இரவு இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதுபற்றி பார்ப்போம்.

அகாண்டா 2 ஒரு மாஸ் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளி வந்திருக்கிறது. நிறைய மாஸ் காட்சிகள் இருந்தாலும் மொத்தமாக படம் திருப்திப்படுத்தவில்லை. முதல் பாகத்தின் முடிவிலிருந்து படம் துவங்குகிறது. சில காட்சிகள் கூஸ்பம்ஸை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பாலையாவின் அறிமுகக் காட்சி மற்றும் இடைவேளை காட்சி சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நன்றாக இருக்கிறது. இது தவிர மற்றவை எல்லாம் அவுட் டேட்டாக இருக்கிறது.

போயப்பட்டு ஸ்ரீனு – பாலையா கூட்டணியில் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை. அகாண்டா முதல் பாகத்தில் தமனின் பின்னனி இசை சிறப்பாக இருந்தது. ஆனால் அகண்டா 2 வில் நிறைய இடங்களில் தமனின் பின்னணி இசை ஒரே சத்தமாக இருக்கிறது.

படம் முழுமையாக திருப்திபடுத்தவில்லை. Below Average என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
ஆனால் பாலையாவின் ரசிகர்கள் அகாண்டா 2-வை கொண்டாடி வருகிறார்கள். 10 நிமிடத்திற்கு ஒரு கூஸ்பம்ஸ்.. படம் முழுக்க மாஸ் காட்சிகள் என்று அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸாக இருக்கிறது. நோ பிசிக்ஸ்.. நோ லாஜிக்.. ஆனால் பாலையாவின் அகாண்டா 2 ருத்ர தாண்டவம்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.