பெருசா ஒன்னும் இல்லையே.... கமெண்ட் செய்தவருக்கு பதிலடி கொடுத்த கோமாளி பட நடிகை.....!

நடிகைகள் பலரும் படங்களில் நடிப்பதை விட சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு காரணம் சோசியல் மீடியா மூலம் தான் ரசிகர்களுடன் நேரடியாக தங்களை கனெக்ட் செய்ய முடியும் என்பது தான்.
அந்த வகையில் கோமாளி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் அடிக்கடி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் குத்தாட்டம் போட்டு வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இவர் கோமாளி படம் தவிர பிரபு தேவாவின் தேள், சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மத லீலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்யுக்தா சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்த நிலையில் ரசிகர் ஒருவர், "இப்படி ஒரு தட்டையான விஷயத்தை நான் பார்த்ததே இல்லை. ரோட்டில் கூட மேடு பள்ளம் இருக்கும்" என அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக கமெண்ட் செய்திருந்தார்.
மேலும் மற்றொருவரும் பெருசா ஒன்னும் இல்லையே என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இவர்களுக்கு பதிலளித்த சம்யுக்தா, "இவ்வளவு ரசனை இல்லாத உன்னுடைய எதிர்காலம் மிகவும் மட்டமாக தான் இருக்கப் போகிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபகாலமாகவே நடிகைகளின் உடல் மற்றும் அங்கங்கள் குறித்த கேலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரசிகர்களும் சில சமயங்களில் எல்லை மீறி கமெண்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.