5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிக்கிற? எக்ஸ்பிரஷன் குயினை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றதால் ராஷ்மிகா வெகு விரைவிலேயே டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான புஷ்பா படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் ராஷ்மிகாவின் மார்க்கெட் உச்சம் தொட்டது. மேலும் பான் இந்தியா படமாக வெளியானதால் தென்னிந்திய மொழிகளில் ராஷ்மிகாவின் புகழ் பரவ தொடங்கியது.
இதன் காரணமாக தற்போது ராஷ்மிகா அவரின் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். ராஷ்மிகா மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை. அடிக்கடி விதவிதமாகவும் வித்தியாச வித்தியாசமாகவும் எக்ஸ்பிரஷன்கள் கொடுத்து போட்டோ ஷூட் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ரசிகர்கள் இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று தான் அழைப்பார்கள். இப்படி ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வரும் ராஷ்மிகாவை தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கிறீர்கள்?
சமீபத்தில் விமான நிலையம் சென்ற ராஷ்மிகாவை மீடியா மற்றும் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். மற்ற நடிகைகளை போல் கெத்து காட்டாமல் ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டே நடந்து செல்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் க்யூட்டாக இருக்கிறீர்கள் என கூறுகிறார்.
உடனே அதற்கு அவர் கொடுத்த ஓவர் ரியாக்சனை தான் தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். மேலும் சிலர் ஏன் இப்படி பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு சீன் போட்றீங்க என விமர்சித்து வருகின்றனர். எக்ஸ்பிரஷன் குடுக்கலாம் தப்பில்லை ஆனா ஓவர் எக்ஸ்பிரஷன் உடம்புக்கு ஆகாதும்மா.....