அப்போ அண்ணன்... இப்போ பிரண்ட்... நாளைக்கு லவ்வரா? பிக்பாஸ் பாசமலர்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமாகி வருகிறார்கள். முன்னதாக பெரிய அளவில் பிரபலம் அல்லாத நபர்கள் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் அக்மார்க் இலங்கை பெண் லாஸ்லியா. இலங்கை செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளயாக பங்கேற்று தனது தமிழ் பேச்சால் ரசிகர்களை வசீகரம் செய்தார்.
மேலும் இவரது அழகு காரணமாகவும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதுமட்டும் இன்றி இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து லாஸ்லியா நடித்த பிரெண்ட்ஷிப் படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் லாஸ்லியா நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய லாஸ்லியா தர்ஷனை தனது நண்பன் என கூறியுள்ளார். முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் அண்ணன் தங்கையாக பழகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தனை நாள் தர்ஷனை அண்ணன் என்று அழைத்து வந்த லாஸ்லியா தற்போது நண்பன் என கூறியுள்ளதால் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் நெட்டிசன்கள் சிலர் நேற்று அண்ணன், இன்று நண்பன், நாளை காதலனா? என கேட்டு வருகின்றனர். முன்னதாக அண்ணன் தங்கையாக பழகிய தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் கூகுள் குட்டப்பன் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.