Cinema News
லியோ பட விழாவில் நடந்த மாபெரும் மோசடி!.. அடுத்த ரஹ்மான் நிகழ்ச்சியாக மாறிய சக்சஸ் மீட்…
Leo sucess meet: லியோ பட ரிலீஸுக்கு இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முயற்சி செய்து பல்பு வாங்கிய தயாரிப்பு நிறுவனம் தற்போது படம் வெளியாகி சக்சஸ் மீட் என சொல்லப்படும் வெற்றிவிழாவை நடத்தி வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் விஜயை பார்க்க முடியாமல் ஏமாந்துபோன ரசிகர்கள் இந்த முறை விஜயை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என நினைத்தார்கள்.
ஆனால், 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி. அதுவும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுகு மட்டுமே. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து, லோன் கொடுப்பது போல பாஸ், ஆதார் அட்டை, மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தின் அடையாள அட்டை என எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டே உள்ளே விடுவோம் என புஸ்ஸி ஆனந்த் சொல்லி அதிர வைத்தார்.
இதையும் படிங்க: லியோவில் ஃபேக்கான கதையை சொன்ன லோகேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த பேரரசு! – யாருகிட்ட?
லியோ படம் வெளியான போதே பல தியேட்டர்களிலும் முதல் காட்சிக்கு அரசு சொன்ன விலையை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்படி வாங்கிய டிக்கெட்டுகளை சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
ஒருபக்கம் இப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது, ஜெயிலர் பட வசூலை தாண்டிவிட்டது என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் பேசி வந்தனர். தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக 545 கோடி வசூல் என அறிவித்தது. இதற்கு பின்னரே இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில விஜய் ரசிகர்களில் சிலர் ‘ரூ.10 ஆயிரம் கொடுத்து விக்கெட் வாங்கியும் தங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை’ என புகார் கூறியுள்ளனர். ‘கேட்டால் உள்ளே இடமில்லை என சொல்கிறார்கள்.. நின்று பார்க்கிறோம் என்று சொன்னாலும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இடமில்லை என்றால் எதற்காக இவ்வளவு டிக்கெட்டுகளை விற்க வேண்டும்?’ என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: நானும் விஜயும் ஃபிரண்டா? என்ன மைக்கேல் ஜாக்சன்? தளபதி 68ல் நடிக்கிறீங்க! – இப்படி சொல்லிட்டீங்க?