More
Categories: Cinema News latest news

அந்த விஷயத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் பட நடிகை…. என்னங்க இப்படி பண்றீங்க?

பொதுவாக திரைபிரபலங்களை மற்றவர்கள் தான் பிராங்க் செய்வார்கள். ஆனால் இங்கு ஒரு நடிகை தான் காதலிப்பதாக கூறி ரசிகர்களை பிராங்க் செய்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தான்.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்த ஜெனிபர் ஹீரோயின் வாய்ப்பு தான் தேடி வந்தார். ஆனால் அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தபாடில்லை. ஏனெனில் கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே அழைக்கிறார்களாம்.

Advertising
Advertising

jennifer

இதனால் ஜெனிபர் சீரியல் வாய்ப்பையாவது பெறலாம் என முயற்சி செய்தார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்து விட்டது. இருப்பினும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெனிபர் அடிக்கடி தான் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படம், வீடியோ என்று எதையாவது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை ஜெனிபர் தான் ஒருவரை காதலிப்பதாக மிகவும் வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஜெனிபர் காதல் விவகாரமும் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவியது. மேலும் நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என ரசிகர்கள் பலரும் ஜெனிபரிடம் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள்.

jennifer

இந்நிலையில் ஜெனிபர் யாரையும் காதலிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம் அதாவது அந்த நிகழ்ச்சி ஜோதிடர் ஒருவருக்கு புரொமோஷன் தரும் நிகழ்ச்சியாம். அந்த நிகழ்ச்சியின் போதுதான் ஜெனிபர், ஆமா நான் காதலிக்கிறேன் என கூறியிருந்தார். ஆனால் தற்போது “அதெல்லாம் இல்லைங்க நான் சும்மா சொன்னேன்” என கூறி ரசிகர்களை பிராங்க் செய்துவிட்டார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதற்கும் ஒரு அளவு வேண்டாமா? எதில் விளையாடுவது என்று அறிவு இல்லையா? இப்படியெல்லாமா பண்ணுவீர்கள்? என ஜெனிபரை கண்டபடி திட்டி வருகிறார்கள்.

Published by
ராம் சுதன்

Recent Posts