விஜய் சேதுபதியை காலி செய்த சிவகார்த்திகேயன்...படம் வந்ததே தெரியலப்பா!....

by சிவா |   ( Updated:2021-10-13 03:19:01  )
vijay sethupathi
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாத தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுப்பவர். எனவே, மிகவும் அதிகமான திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக அவர் மாறியுள்ளார்.

ஒருபக்கம் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். சினிமா, டிவி, ஓடிடிக்கான படங்கள், வெப் சீரியஸ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிப்படங்களில் நடிப்பது என எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார். ‘என் திருமண வீடியோவில் விஜய் சேதுபதி வருகிறாரா என பார்த்தேன்’ என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் வரை அவர் பிஸியாக இருந்தார்.

vijay-sethupathi

ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களை கவரும் படி இருக்கும். ஆனால், தற்போது அப்படி இல்லை. ஒரே மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி என 3 திரைப்படங்கள் வெளியாகியது.

ஆனால், அப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. எனவே, விஜய் சேதுபதி கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இப்படியே போனால் அவரின் மார்கெட் சரிந்துவிடும் என சினிமா விமர்சகர்கள் கூற துவங்கினர்.

mugizh

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் முகிழ் என்கிற திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அவரின் மகளும் நடித்திருந்தார். அப்பா - மகளாகவே இருவரும் நடித்திருந்தனர். ஆனால், இப்படி ஒரு படம் வெளியானதே ரசிகர்களுக்கு தெரியவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் 9ம் தேதி வெளியான 'டாக்டர்' படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பே இதற்கு காரணம் எனத்தெரிகிறது.

sivakarthikeyan doctor

sivakarthikeyan doctor

பல மாதங்கள் கழித்து தியேட்டருக்கு சென்றவர்கள் டாக்டரை பார்க்கவே விரும்புகிறார்கள். எனவே, விஜய் சேதுபதி படம் காணாமல் போய்விட்டது. இப்படத்திற்கு விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளர். எனவே, இப்படத்தால் அவருக்கு சில கோடிகள் நஷ்டம் எனத்தெரிகிறது.

Next Story