சூர்யா படத்தை வெளியிட மறுக்கும் படக்குழு.! ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!

by Manikandan |
சூர்யா படத்தை வெளியிட மறுக்கும் படக்குழு.! ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!
X

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில், ப்ரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆகையால் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- சூர்யா படத்திற்கு வந்த பெரும் சோதனை.! முடிவு முதலமைச்சர் கையில்.!?

இதற்கு முன்னால் வாரம்தோறும் ஞாயிறு ஊரடங்கு இருந்ததால் படத்தை எப்படி வெளியிடுவது என்ற யோசனைக்கு தள்ளப்பட்டது எதற்கும் துணிந்தவன் படக்குழு.

தற்போது நான் இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு 100% தளர்வுகள் எப்போ அறிவிக்கப்படுமோ அப்போ தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

surya etharkkum thuninthavan

இதற்கிடையில், இறுதியாக வெளியான 'சூரரைப் போற்று' மற்றும் "ஜெய் பீம்" OTTயில் வெளியானதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். இதனால்,எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, எதற்கும் துணிந்தவன் படத்திற்காக சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு காத்திருக்கின்றனர்.

Next Story