Cinema News
சொதப்பி வரும் ஜெயம் ரவி!.. கடைசியா சோலோவா ஹிட்டு கொடுத்து எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா?..
முதல் படமே வெற்றிப் படமாக அமைய வேண்டும் என ஜெயம் எனும் படத்தின் அண்ணன் இயக்கத்தில் அறிமுகமான நடிகர் ரவி தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கை ஜெயமாக அமைய வேண்டும் என்பதால் ஜெயம் ரவி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
தொடர்ந்து ரீமேக் படங்களில் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்து வந்த ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு தாறுமாறாக சோலோ ஹீரோவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இதையும் படிங்க: இது அக்டோபர் மாசமா இல்லை அப்டேட் மாசமா?.. இப்படி மூணு சிங்கம் ஒண்ணா களமிறங்குதே!..
தனி ஒருவன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படம் தான். அந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஒரு சோலோ ஹிட் வெற்றியைக் கூட கொடுக்கவில்லை என அவரது ரசிகர்களே வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் ரோல் ஆன பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் ஜெயம் ரவி முதல் பாகமே 500 கோடி ரூபாய் வரை வசூல் இருந்தது. இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் பெரிய அளவில் சொதப்பிய நிலையில் 300 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வீட்டுக்கு உள்ளே சென்ற 18 போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா?.. இதோ லிஸ்ட்!..
சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன். ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளி பாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அந்தப் படத்தில் நடித்த நிலையில் அது ஜெயம் ரவியின் சோலோ படமாக கருதப்படவில்லை.
இந்த ஆண்டு வெளியான அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் ஜெயம் ரவி ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளதாகவும் நல்ல கதைகளை தேர்வு செய்து ஜெயம் ரவி ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன், ஜீனி, பிரதர் மற்றும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தனி ஒருவன் 2 படத்தின் மீதுதான் ரசிகர்கள் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வைத்துள்ளனர் என்கின்றனர்.