சேலையில வீடு கட்டவா... கலர்புல் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா!!
தமிழ் சினிமாவில் சிறு சிறு கேரக்டரில் நடித்து அதன்பின் நாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும்போதே தைரியமாக 'காக்கா முட்டை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல், இந்த படம் தேசிய விருது பெற்றது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. நாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார்.
மேலும், சாமி 2, மனிதன், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்திருந்தார். வடசென்னை படத்தில் அந்த கேரக்டரில் பக்காவாக பொருந்தி நடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றார்.
கடைசியாக இவர் நடிப்பில் திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. தமிழில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கிலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நானிக்கு ஜோடியாக நடித்த டிரக் ஜெகதீஷ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் பட்டு புடவையில் இருக்கும் படங்களை பதிவேற்றியுள்ளார். இதில் பார்ப்பதற்கு புது பெண் போல இருக்கிறார். இந்த படம் தற்போது வைரலாகி வருகின்றது.