தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பேன்னா படம் மூலம் அறிமுகமானார். நடித்தது சில படங்களே என்றாலும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றியடைவதால் வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது.

Also Read
ஷியாம் சிங்கராய், பங்கராஹு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி தான் தன் சம்பளத்தை 1.50 கோடி வரை உயர்த்தி விட்டார்.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.




