க்யூட்டா சிக்குன்னு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... இது செம வைரல்...
தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை மேனகாவின் மகளாவார்.
மிக குறுகிய காலத்திலே இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய்யுடன் பைரவா, சர்க்கார், தனுஷுடன் தொடரி, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
தமிழைப்போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அங்கும் முன்னணி நடிகையாகிவிட்டார். தெலுங்கில் முக்கியமாக, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதைப்பெற்றார்.
இதன்பின் இவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. தற்போது இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இது தவிர சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.