Categories: Entertainment News

கொஞ்சூண்டுதான் சிரித்தாள்… ஆனா வெண்ணை மாதிரி பளிச்சுன்னு இருந்தது..!!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஏதாவது ஒரு கவர்ச்சி படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவாறு உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில், ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், மாடலிங் துறையில்மூலம் சினிமாவில் நுழைந்தார். ராஜா ராணி படத்திற்குப் பின் படங்கள் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார்.

sakshi agarwal

அதன்பின் பலராலும் பரவலாக அறியப்பட்டார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது. அந்தவகையில் ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் நடித்திருந்தார். அதன்பின் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

sakshi agarwal

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தவகையில் தற்போது கருப்புநிற உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார் சாக்ஷி. இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சமாக சிரித்தாலும், பளிச்சுன்னு வெண்ணை போன்ற பற்களை காட்டியுள்ளார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Published by
ராம் சுதன்