மாடர்ன் டிரெஸ்னாலும் நீ நாட்டுக்கட்டதான்!....ஐஸ்வர்யா ராஜேஷை நக்கலடிக்கும் நெட்டிசன்கள்
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். இவர் அதிகமாக நடித்தது விஜய் சேதுபதியுடன்தான். இவர் நடிக்கும் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்வார்.
கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக அசத்தியிருந்தார். பல படங்களில் நடித்தாலும் குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருந்தது.
அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை நகரத்து பெண்ணாக பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. ஆனாலும், விடாமல் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘மாடர்ன் டிரெஸ் போட்டாலும் நீ நாட்டு கட்டதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.