நடிகர் ரஜினி ஒரு கமர்ஷியல் மசாலா ஹீரோ என்றாலும் அவர் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உடையவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் 30 வருடங்களுக்கு முன்பே அவர் திரையுலகில் கொடிகட்ட பறந்த போதே சினிமாவிலிருந்து விலகி முழுநேர ஆன்மீகவாதி ஆக நினைத்தவர். அவரின் குரு பாலச்சந்தர்தான் அதை தடுத்து நிறுத்தினார்.
ஸ்ரீராகவேந்திரா கடவுளை முதலில் வணங்கி வந்த ரஜினி அதன்பின் பின் இமயமலை பாபாவை வணங்க துவங்கினார். அடிக்கடி இமயமலைக்கு ஆன்மீக பயணமும் மேற்கொள்வார். ஸ்ரீராகவேந்திரா சாமி கதையில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். அதுதான் அவரின் நூறாவது திரைப்படம் ஆனால், அப்படம் வெற்றிபெறவில்லை.
அதேபோல், பாபா சாமியை வைத்து ’பாபா’ என்கிற கதையை எழுதினார். சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து அப்படத்தை இயக்க சொன்னார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. ரஜினிக்கு மிகவும் பிடித்த ‘பாபா’ படம் தோல்வி அடைந்தது அவரின் மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: அட கேளுங்க!.. நயனின் திரைப்படத்திற்கு இந்த சிறப்பு உண்டா?.. இதுலயும் அம்மணி தான் டாப்!..
இந்நிலையில்தான், அப்படத்தில் சில மாற்றங்களை செய்து படத்தை மீண்டும் வெளியிடும் வேலையில் ரஜினி இறங்கியுள்ளார். மந்திரத்தை பயன்படுத்தி வில்லன்களை வீழ்த்தி தனக்கு அரசியல் வேண்டாம் என ஒதுங்கி, ஒருவரை முதல்வராக நியமித்துவிட்டு ரஜினி இமயமலை நோக்கி செல்வது போலவும். ஆனால், வில்லன்கள் முதல்வரை கொல்வது போலவும், இதனால், ரஜினி மீண்டும் அரசியலுக்கு திரும்புவது போலவும் பாபா படத்தின் இறுதிக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இதை நேரிடையாக கூறாமல் பூசி மழுப்பியதால் அது ரசிகர்களை கவராமல் போனது. அதோடு, சுவாரஸ்யமில்லாத திரைக்கதையும் இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். தற்போது இப்படத்தில் என்ன மாற்றங்களை ரஜினி செய்திருக்கிறார் என்பது தெரியவில்லை. சமீபத்தில் இப்படத்திற்காக அவர் டப்பிங் பேசும் புகைப்படங்களும் வெளியானது. எப்படியாவது இந்த படம் வெற்றி பெற வேண்டும் என ரஜினி ஆசைப்படுவது தெரிகிறது.
ஆனால், இதுபற்றி ரசிகர்கள் கருத்து தெரிவித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலானோர் செல்வது என்னவெனில், இது தேவையில்லாத வேலை, இப்போது ரீரிலீஸ் செய்தாலும் பாபா படம் ஓடாது.. யாரும் பார்க்க மாட்டார்கள். பாபா படத்தில் அந்த ஆன்மிகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் போர்.. எனவே, அதை தூக்கிவிட்டு ரிலீஸ் செய்யலாம்.. இதற்கு பதில் ரஜினியின் வேறு படத்தை மீண்டும் வெளியிடலாம்.. என்றுதான் கூறுகிறார்கள்.
ஆனாலும், நம்பிக்கையுடன் இருக்கிறார் ரஜினி…காத்திருப்போம்!…