SaiPallavi: அணு அணுவா ரசிக்கிறானே.. யாருப்பா நீ? சாய்பல்லவியை பின் இருக்கையில் இருந்து ஒருவர் ரசிக்கும் வீடியோ

Published on: November 8, 2024
sai 1
---Advertisement---

SaiPallavi: அமரன் படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. மேஜர் முகுந்த் வரதராஜனை ஒரு பக்கம் கொண்டாடினாலும் அதில் இந்து ரெபேக்கா வர்க்கீஸாக சாய் பல்லவியை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த படத்தின் கதையையே தன்னுள் சுமந்து தாங்கிக் கொண்டிருப்பார் சாய்பல்லவி.

அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு நடிப்பும் பார்ப்பவர்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறது. அந்தப் படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு ஆணும் இப்படி ஒரு காதலி இப்படி ஒரு மனைவி கிடைக்க மாட்டாளா என்ற அளவுக்கு ஏங்க வைத்திருக்கிறது. உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அப்படியே பெரிய திரையில் காட்டுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.

இதையும் படிங்க: Srikanth: இவன் கூட படம் பண்ணவே கூடாது! ஸ்ரீகாந்தை பற்றி சுந்தர் சி சொன்னதுக்கு பின்னாடி இதான் காரணமா?

அதை சாய் பல்லவி தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார். முதலில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக அனைவரையும் கொள்ளை கொண்டவர் இப்போது இந்துவாக அமரன் படத்தில் ஒட்டுமொத்தமாக சாய்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும் தெலுங்கில் லேடி பவன் கல்யாண் என்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் .

இன்னொரு பக்கம் பாக்ஸ் ஆபிஸ் குயின் என்றும் அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தேர்ந்தெடுக்கும் கதையில் நிதானமாக செயல்பட்டு ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. அப்போது சாய் பல்லவிக்கு பின் இருக்கையில் அமர்ந்த ரசிகர் ஒருவர் சாய் பல்லவியை அணு அணுவாக ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: Ramyapandian: கங்கை நதியோரம் டும் டும் டும்..! காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன்… ஜோடி பொருத்தம் சூப்பர்!…

அந்த ரசிகர் ரசிக்கும் விதமே மிக அழகாக இருக்கிறது. பக்கத்தில் இருந்தும் சாய்பல்லவியை மிஸ் பண்ணுகிறோமே என்ற ஒரு ஏக்கம் அந்த ரசிகரின் கண்ணில் தெரிகிறது. அந்த அளவுக்கு கண்ணிமைக்காமல் சாய்பல்லவியை பார்த்துக் கொண்டே இருக்கிறார் அந்த ரசிகர். அந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

saipallavi
saipallavi

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி அடுத்து தெலுங்கில் நாக சைதன்யாயுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அமரன் திரைப்படம் பெருமளவு வெற்றி பெற்றதை அடுத்து இன்னும் தொடர்ந்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் எண்ணமும் அதுவாக தான் இருக்கிறது. இப்படி ஒரு நடிகையை தயவுசெய்து மிஸ் பண்ணிடாதீங்க என ஒவ்வொரு ரசிகர்களுமே கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DCGoYWDRwdt/?igsh=cWx5aHUyd3p6eTdi

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.