Connect with us
MGR

Cinema History

காதலிக்குற மாதிரி நடிச்சதுக்கே இந்த நிலைமையா?… எதிர்ப்புக்குள்ளான எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

தற்கால சினிமாக்களில் படுக்கை அறை காட்சிகள் கூட மிகவும் சாதாரணமாக இடம்பெறுகிறது. ஆனால் சினிமா தொடங்கிய காலகட்டத்தில் காதலன் காதலி ஓடிப்பிடித்துதான் விளையாடுவார்களே தவிர முத்தம் கூட கொடுத்துக்கொள்ள மாட்டார்கள். அக்காலகட்டத்தில் இருந்த தமிழ் சமூகம் அந்தளவுக்கு பரந்துபட்ட மனம் உடைய சமூகமாக வளரவில்லை.

இந்த நிலையில் சினிமாவில் மிகவும் நெருக்கமான காதல் காட்சியை படமாக்கிய ஒரே காரணத்திற்காக ஒரு பிரபல இயக்குனர் எதிர்ப்பை சம்பாத்தித்து இருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் முதன்முதலில் நடித்த “சதிலீலாவதி” திரைப்படம் உட்பட “அம்பிகாபதி”, “சூர்ய புத்திரி”, “தாசி பெண்”, “மந்திரிகுமாரி” போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர் எல்லீஸ் ஆர் டங்கன். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். ஆனால் தமிழில் பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

1950 ஆம் ஆண்டு நரசிம்ம பாரதி, மாதுரி தேவி ஆகிய பலரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பொன்முடி”. இத்திரைப்படத்தை எல்லீஸ் ஆர் டங்கன் இயக்க, மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதியும் மாதுரி தேவியும் மிகவும் நெருக்கமாக இருக்கும்படியான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இத்திரைப்படம் வெளியானபோது அக்காதல் காட்சிகளை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாகிவிட்டதாம். “இயக்குனர் டங்கன் அமெரிக்காவை சேர்ந்தவர். ஆதலால் அமெரிக்க கலாச்சாரத்தை தமிழர்களிடையே திணிக்கப்பார்க்கிறார்” என்று பலரும் அத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனராம். எனினும் ஒரு பக்கம், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகள் தத்ரூபமாக இருப்பதாகவும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் செய்ய தவறியது!.. துணிந்து செஞ்ச அஜித்!.. தனி ஆளா நின்னு சாதிச்ச தல..

google news
Continue Reading

More in Cinema History

To Top