Thalaivar173: டெய்லராக ரஜினி!. ஹாலிவுட் பட காப்பியா?!. அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டாங்களே!…

Published on: January 3, 2026
thalaivar173
---Advertisement---

ரஜினியின் 173வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவது உறுதியாகியிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியானது. ஏற்கனவே தலைவர் 173 படத்தை இயக்கப் போவது சுந்தர்.சி என அறிவிக்கப்பட்டு அதன்பின் அவர் அந்த படத்திலிருந்து விலகவே தற்போது சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்திருக்கிறார் ரஜினி.

கடந்த சில வருடங்களாகவே ரஜினி லோகேஷ், நெல்சன் போன்ற இளம் இயக்குனர்களுடன் பயணித்து வரும் நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் சிபி சக்கரவர்த்தியும் இணைந்திருக்கிறார். இந்த படம் தொடர்பான புரோமோ வீடியோ மற்றும் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் டெய்லர்கள் பயன்படுத்தும் கத்திரிக்கோள், துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஹீரோ இருப்பார் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

இதை வைத்து தலைவர் 173 என்ன மாதிரியான படம் என ரசிகர்கள் யூகிக்க துவங்கிவிட்டார்கள். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்க்கும்போது டெய்லராக இருக்கும் ரஜினி தனது குடும்பத்திற்கு பிரச்சனை கொடுக்கும் கேங்ஸ்டர் கும்பலை வீழ்த்துவார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்கிறார்கள் சிலர்.

மேலும் 2022-ல் வெளிவந்த The Outfit என்கிற ஹாலிவுட் படத்தின் கதையைத்தான் சுட்டு சிபி சக்கரவர்த்தி படமாக எடுக்கப்போகிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் சொல்ல துவங்கி விட்டார்கள். ஏனெனில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு டெய்லர் கேங்ஸ்டர் கும்பலை எதிர்ப்பதுதான் அந்த படத்தின் கதை. எனவே அதை தலைவர் 173 படத்தோடு முடிச்சி போட்டுவிட்டனர் சில ரசிகர்கள்.

உண்மையிலேயே The Outfit படத்திலிருந்து சுட்டுதான் தலைவர் 173 படத்தின் கதையை சிபி சக்கரவர்த்தி உருவாக்கினாரா என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.