
Cinema News
அந்த நடிகையா இவங்க.. ஆளே இப்படி மாறிட்டாங்களே!!
சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்து கடந்த 2010ல் வெளியான படம் களவாணி. இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச்சேர்ந்த நடிகை ஓவியா. இப்படம் வெளியாகும் முன்பே நாளை நமதே என்ற படத்திலும் ஓவியா சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப்படத்தில் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததாலும், அப்படம் சரியாக ஓடாததால் அவர் பரவலாக அறியப்படவில்லை. களவாணி படம் வெற்றிபெற்றதையடுத்து களவாணி ஓவியா என்றே இவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

oviya
இப்படத்தின் வெற்றி இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார். இப்படத்திற்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமல், மாதவன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதன்பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு கோடான கோடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். ஓவியாவின் வாழ்க்கையை பிக்பாஸுக்கு முன் பிக்பாஸுக்கு பின் என்றே பிரிக்கலாம். அந்த அளவிற்கு பிக்பாஸில் இவர் மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ்க்கு பின்னர் இவர் வரிசையாக 5 தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் இந்தப்படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. தமிழில் கடைசியாகஇவர் நடித்த களவாணி 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவரும் மற்ற நடிகைகளைப்போல் அவ்வப்போதுசமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார்.

oviya
சமீபத்தில் ஒரு படத்தை பதிவேற்றியுள்ளார். அந்த படத்தில் இவர் முகத்தில் புன்சிரிப்புடன் இருந்தாலும் மிகவும் மெலிந்து, கன்னமெல்லாம் ஒட்டி ஆளே மாறிப்போய் உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார். தற்போது ஓவியா ராஜபீமா, சம்பவம் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.