சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சூர்யா தற்போது தனது கங்குவா படத்தை அதே தேதியில் ஏன் வெளியிடுகிறார் என்கிற கேள்வியை சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் ரஜினிகாந்த் படம் மோதுகிறது இந்திய அளவில் ஆயுத பூஜைக்கு எந்த ஒரு பெரிய படமும் ரிலீசாகவில்லை அதை முன்னிட்டு தான் கங்குவா படத்தை பேன் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தனஞ்செயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு வேலையையும் உருப்படியா செய்ய மாட்டாரா பிரபாஸ்!.. இப்படியே போனா அடுத்த படம் என்ன ஆகுமோ?..
அதைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் பேன் இந்தியா ஸ்டார் கிடையாதா? வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 10-ஆம் தேதி படம் வெளியாகும் போது சூர்யா எடுத்த முடிவு தவறான முடிவு என்பதை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உணர வைப்பார்கள் என ரசிகர்கள் போட்டு வெளுத்து வருகின்றனர்.
ரஜினி படம் ஒரு பக்கம் உள்ளநிலையில் இன்னொரு பக்கம் சூர்யாவை வைத்து ஜெய் பீம் எனும் சிறப்பான படத்தைக் கொடுத்த இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய சூர்யாவுக்கு எப்படி மனசு வந்தது. கொஞ்சம் கூட நன்றி உணர்வு கிடையாதா என தற்போது ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த படம் மட்டும் வரட்டும் பாருங்க!.. எஸ்.கே.வின் நெகட்டிவ் இமேஜே மொத்தமா மாறிடுமாம்!..
இரண்டு படங்களும் பெரிய படங்கள் தனித்தனியாக இரண்டு வார இடைவெளியில் வெளியானால், தமிழ் சினிமாவுக்கு தானே நல்லது. ஆனால் சூர்யா சுயநலமாக ஏன் சிந்திக்கிறார் என்றும் கமல்ஹாசனுடன் போட்டி போடும் விதமாக ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படத்திற்கு எதிராக பாலிவுட்டில் அவர் தயாரித்துள்ள சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை வெளியிடுகிறார். இங்கே ரஜினிகாந்தை எதிர்க்க முன்வந்துள்ளார். திடீரென்று சூர்யாவுக்கு இப்படி எல்லாம் ஐடியா கொடுப்பது யார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஆனால், பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டு படங்கள் ஓடியது போலவே கங்குவா மற்றும் வேட்டையன் ஓடும் என்றும் எந்தவொரு சிக்கலும் வராது என தனஞ்செயன் அந்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், அதையும் தாண்டி ரஜினிகாந்த் ரசிகர்கள் சூர்யாவை திட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயை ‘வாடா போடா’ என அழைக்க தயங்கிய திரிஷா!.. ஒரு பிளாஷ்பேக்!..
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…