டான் படம் எப்படி இருக்கு?!...ரசிகர் ஒருவர் சொல்றது பாருங்க!...(வீடியோ)...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சில தியேட்டர்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது.இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளிவருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர் ஒருவர் நம்முடைய யுடியூப் சேனலுக்கு கருத்து தெரிவித்த போது படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முதல் பாதி கல்லூரி வாழ்க்கை, காதல் என ஜாலியாக செல்வதாகவும், இரண்டாம் பாதி எமோஷன், சென்டிமெண்ட் என சிறப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த ரசிகர் டான் படம் பற்றி பேசும் வீடியோ உங்கள் பார்வைக்கு..