பிரபாஸுக்கும் தீபிகாவுக்கும் பிறக்குற குழந்தை தான் கல்கியா?.. அதுவும் அந்த ஹீரோவா?.. முடியலப்பா!..

Published on: June 11, 2024
---Advertisement---

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் சோபனா நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. அந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் தற்போது கல்கி படத்திற்கு ஏகப்பட்ட கதைகளை யூகித்து வருகின்றனர்.

கல்கி திரைப்படத்தில் பிரபாஸ் பைரவா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், கமல் கல்கியாக நடிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், அவர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது டிரைலரில் தெளிவாக வெளியான நிலையில், கல்கி அவதாரம் பிரபாஸுக்கும் தீபிகா படுகோனுக்கும் பிறக்கும் மகன்தான் என புது உருட்டை ரசிகர்கள் உருட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் நேர்ல போய் கல்யாண நோட்டீஸ் கொடுத்த வரலக்‌ஷ்மி சரத்குமார்!.. சிம்புவும் வருவாரா?..

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபாஸை பிரபலம் ஆக்கினார் ராஜமவுலி. அதன் பின்னர் பிரபாஸ் நடித்தால் குறைந்தது 500 கோடி ரூபாய் படத்தில் தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்கள் அவரது பேராசை காரணமாக படுதோல்வியை சந்தித்தது. சரியான திரைக்கதையும் மேக்கிங் இங்கும் இல்லாமல் பல கோடி பட்ஜெட்டை பிரபாஸை நம்பி கொட்டி தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டதுதான் மிச்சம் என்கிற நிலைமைக்கு சென்று விட்டது.

இதையும் படிங்க: விசு கதை சொல்ல அரட்டை அடித்த கண்ணதாசன்… ஆனா பாடல் வந்ததுதான் கூஸ்பம்ப்ஸ்!

கடந்த ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் சற்றே தப்பித்து 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிரபாஸுக்கு கம்பேக் கொடுத்தது. அதே வேகத்தில் தற்போது கல்கி படத்தை வெளியிட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டி விடலாம் என்கிற பக்கா பிளானுடன் களமிறங்கி இருக்கிறார் பிரபாஸ்.

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுக்கு பிறக்கும் மகன்தான் கல்கி அவதாரம் என்றும் விஜய் தேவர்கொண்டா தான் அடுத்த பாகத்தில் கல்கியாக வருவார் என்றும் தற்போது தெலுங்கு ரசிகர்கள் கல்கி படத்திற்கு நாக் அஸ்வின் யோசிக்காத அளவுக்கு ஒரு கதையை உருவாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதல்ல எனக்கு செட்டில் பண்ணுங்க!.. விடாமுயற்சிக்கு வேட்டு வைத்த உதயநிதி!.. ஷூட்டிங் நடந்த மாதிரிதான்!

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.