Connect with us
rrr

Cinema News

உங்க படத்தை பாக்க மாட்டோம்!…. ஆர்.ஆர்.ஆர் படக்குழுக்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்…..

பாகுபலி படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ அசத்தலாக இருந்தது. பாகுபலி படம் போலவே இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஜடந்த ஜனவரி 7ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது. மார்ச் 25ம் தேதி இப்படம் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் மட்டுமே மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகாவில் தமிழ் மற்றும் ஹிந்தி என மொழிகளில் வெளியாகிறது. ஆனால், கன்னடத்தில் ரிலீஸ் செய்தால் மட்டுமே இப்படத்தை பார்ப்போம் என சிலர் கிளம்பியுள்ளனர்.

twitt

டிவிட்டரில் இதை தெரிவித்து #BoycottRRRinKarnataka என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். எங்கள் மாநிலத்தில் எங்கள் மொழியில் நீங்கள் வெளியிடாதது எங்களுக்கு அவமானம். எனவே, ஆர்.ஆர்.ஆர். படத்தை நிராகரிப்போம் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

twitt

google news
Continue Reading

More in Cinema News

To Top