ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கப் போவது சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
முதலில் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால் சுந்த.சி அந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்பட்டது. அதன்பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாகவும் அவர்தான் தலைவர் 173 படத்தை இயக்கப்போகிறார் எனவும் செய்திகள் வெளியானது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காதபடி திடீர் டிவிஸ்ட்டாக ரஜினியின் 173 வது படத்தை இயக்குவது சிபி சக்கரவர்த்தி என அறிவித்திருக்கிறார்கள். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் மார்ச் மாதம் துவங்கும் என்கிறார்கள் மேலும் 2027 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஒருபக்கம் இந்த படத்துக்கு எதிராகவும், நெகட்டிவாகவும் சிலர் இப்போதே பேச துவங்கி விட்டனர். ஒருபக்கம் சிபி சக்ரவர்த்தி ஒரே ஒரு படத்தை இயக்கிய இயக்குனர். அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் அளவுக்கெல்லாம் அனுபவம் இல்லை. ரஜினி எப்படி இவரை இயக்குனராக தேர்ந்தெடுத்தார்? என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
சிலரோ லோகேஷ் கனகராஜ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனராக இருந்தார். ஆனால் கூலி படத்தின் ரிசல்ட் அவரின் மார்க்கெட்டையை காலி செய்துவிட்டது. அதனால்தான் ரஜினி, கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்போது யாருமே லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுவதில்லை. எனவே, தலைவர் 173 படம் ஓடவில்லை என்றால் லோகேஷுக்கு என்ன நடந்ததோ அதுதான் சிபி சக்ரவர்த்திக்கும் நடக்கும் என சிலர் கொளுத்தி போடுகிறார்கள்.
படத்தின் ஷூட்டிங்கே இன்னும் துவங்கவில்லை. அதற்குள் இப்படியெல்லாம் பேச தேவையில்லை என ஒருபக்கம் ரஜினி ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.
