டேய் சாய் அபயங்கரு! மியூசிக்க விட்ருடா!.. கருப்பு பாடலை ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்…

 

தற்போது இளசுகளிடம் பிரபலமாகி வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இத்தனைக்கும் இவரின் இசையில் ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. பாடகர் திப்பு, பாடகி ஹரிணி தம்பதியின் மகன் இவர். சாய் அபயங்கர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியான இரண்டு ஆல்பம் பாடல்கள் வரவேற்பை பெற்றதால் இவருக்கு சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.

அனிருத்துடன் சில வருடங்கள் வேலை செய்துள்ளார். ஆச்சர்யப்படும்படி ஒரே நேரத்தில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது.. பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். அதில் ஒரு பாடல் ஜென் சி - இளசுகளை கவர்ந்தாலும் மற்ற பாடல்கள் நன்றாக இல்லை என்கிற விமர்சனம் வந்தது.

அடுத்து ஆர்,ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ என்கிற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். அந்த பாடலை நேற்று படக்குழு வெளியிட்டது..

இந்த பாடல் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது, யுடியூப்பிலேயே இந்த பாடலை பலரும் கழுவி ஊற்றுகிறார்கள். இசைம் நன்றாக இல்லை, பாடலின் வரிகளும் புரியவில்லை.. பாடல் துவங்கியதே தெரியவில்லை. பாடல் ஸ்ட்ரக் ஆனது போல் இருந்தது’ என்றெல்லாம் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்..

டேய் சாய் அபயங்கரு! மியூசிக்க விட்ருடா!.. கருப்பு பாடலை ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்…

ஒருவர் ‘ டேய் சாய் அபயங்கரு.. படத்துக்கு எவ்ளோடா சம்பளம் வாங்குவ சொல்லுடா.. நான் பிச்சை எடுத்தாவது கொடுக்குறேன். இசையை விட்ருடா.. இளையராஜா, ரகுமான், யுவன், வித்யா சாகர், ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேட்டு வளர்ந்தவன்டா நானு’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=2Cf3e_G_IkQ&list=RD2Cf3e_G_IkQ&start_radio=1

From Around the web