இந்த பாட்டு அவருக்கா?!. ஏத்துக்கவே மாட்டோம்!.. கார்த்தி படம் ஃபிளாப் ஆனதன் காரணம்!...

சினிமாவை பொறுத்தவரை பாடல்கள் என்பது மிகவும் முக்கியம். தமிழில் சினிமா உருவானது முதல் இப்போது வரை பல திரைப்படங்களின் வெற்றிக்கு பாடல்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதனால்தால்தான் 80களில் முடிசூடா மன்னனாக இருந்தார் இளையராஜா. இவரின் இசையாலேயே பல படங்கள் வெற்றியை பெற்றது. இளையராஜா இசை என்றால் வினியோகஸ்தர்கள் கண்ணை மூடிக்கொண்டு அப்படத்தை தயாரிப்பளிடமிருந்து வாங்குவார்கள்.
பல மொக்கை படங்கள் கூட இளையராஜாவின் பாடல்களால் ஓடியிருக்கிறது. இது ஒருபுறம் எனில் நல்ல பாடல்கள் இருந்தும் சில திரைப்படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. அதற்கு காரணம் ஆடியோவில் ரசிகர்கள் கேட்ட ஒரு பாடல் அப்படத்தின் ஹீரோவுக்கு அமையாமல் வேறு நடிகர்களுக்கு அமைந்துவிடும்.
இதையும் படிங்க: விஜயை நம்பி விழிபிதுங்கி நிற்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்! தளபதியின் கணக்கே வேற..
இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விடும். இதை மனதில் கொண்டு சில படங்களை வினியோகஸ்தர்கள் வாங்காமல் கூட போய்விடுவார்கள். இதனால் சில படங்கள் தோல்வி அடைந்துவிடும். அப்படி ஒரு கார்த்தி படம் தோல்வி அடைந்த நிகழ்வைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.
கார்த்தி ஹீரோவாக நடித்து 1988ம் வருடம் வெளியான திரைப்படம் ‘சொல்ல துடிக்குது மனசு’. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தை எடிட்டர் லெனின் இயக்கியிருந்தார். இந்த படத்தின் ஆடியோ வெளியான போது இப்படத்தில் இடம் பெற்ற ‘பூவே செம்பூவே உன் வாசம் வரும்’ என்கிற பாடல் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. ஏனெனில், இளையராஜாவின் அற்புதமான மெலடி அது.
இதையும் படிங்க: நயன்தாராதான் வேணும்.. அடம் பிடித்த ஆர்யா.. போட்டுக்கொடுத்த இயக்குநர்..
யேசுதாஸ் பாடிய அந்த பாடல் மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த பாடலை படத்தில் கார்த்திக் பாடுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். வினியோகஸ்தர்களும் அப்படியே நினைத்தனர். ஆனால், படத்தில் இந்த பாடலை ராதாரவி பாடுவார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சில வினியோகஸ்தர்கள் ‘ராதாரவி இந்த பாட்டை பாடினால் படம் ஓடாது. எனவே, நாங்கள் படத்தை வாங்க மாட்டோம். கார்த்திக் பாடுவது போல காட்சியை மாற்றுங்கள்’ என கூறினார்களாம். ஆனால், இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லை.
எனவே, இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை. படம் வெளியான பின் இதே எண்ணம் ரசிகர்களுக்கும் வந்தது. எனவே, சொல்ல துடிக்குது மனசு திரைப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சி-யிடம் விஜய் வைத்த வேண்டுகோள்.. அப்பா மீது இவ்வளவு பாசமா?.. இவர போயா அடிக்கிறீங்க!…