Cinema News
தளபதி விஜய்க்கு இப்படி ஒரு திறமையா?! கணக்கு போட ஆரம்பித்த ரசிகர்கள்.!
தளபதி விஜய் தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே இயக்குனர் செல்வராகவன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்து 66வது திரைப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். அதற்கான சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தை, அடுத்து விஜய் மீண்டும் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. அந்த லிஸ்டில் லோகேஷ் கனகராஜ், அட்லி என பல பெயர்கள் அடிபடுகின்றன.
நேற்று தேர்தல் லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது வரை இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. அதற்கு காரணம் அந்த போட்டோவை எடுத்தவர் நடிகர் விஜய் அதனை அவர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த போட்டோவில் இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி என மூவரும் இருக்கின்றனர்.
இதையும் படியுங்களேன்-
இரண்டு மந்தையில் இருந்த ஆடுகள் மீண்டும் இணைய உள்ளன.! இது வெறும் பழமொழிதான்பா.! |
இதனைக் கண்ட ரசிகர்கள் அந்த போட்டோ அருமையாக உள்ளது. விஜய் தான் அடுத்த இடத்தை அறுபத்து ஏழாவது படத்தை , லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அறுபத்தி எட்டாவது படத்தை அட்லி இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். திறமையான இளம் இயக்குனர்களை அடையாளம் கண்டு அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு எடுத்து வருகிறார் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.