Connect with us
jaya_main_cine

Cinema History

சொத்துக்களை இழந்த சோகம்!…சினிமாவையே உலுக்கிய நடிகையின் மரணம்!..

தெலுங்கில் இருந்து வந்து தமிழ் நன்றாக பேசி நடித்த நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை படாபட் ஜெயலட்சுமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 66 படங்களில் நடித்து முக்கிய நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தவர். தமிழில் இயக்குனர் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் படாபட் ஜெயலட்சுமி.

jaya2_cine

jayalakshmi

பாலச்சந்தரின் அறிமுகம்

சுப்ரியா என்ற தனது பெயரை படாபட் ஜெயலட்சுமி என மாற்றியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாலசந்தர் தான். அவர் அறிமுகம் செய்த படமான ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் ஜெயலட்சுமி என்ற மாற்றினார். மேலும் அந்த படத்தில் படாபட் என்ற வசனத்தை அடிக்கடி கூறியதால் படாபட் ஜெயலட்சுமி என ஆனது.

jaya3_Cine

jayalakshmi

அவள் ஒரு தொடர் கதை, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் அவரின் கெரியரில் மிக முக்கியமான படங்களாகும். ரஜினி, கமல், என்.டி.ஆர். சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதிலும் சரி பிரபலங்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

இதையும் படிங்க : பத்தே நாளில் முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அந்த பிரம்மாண்ட திரைப்படம்… எப்படிப்பா!!

ரஜினியின் விருப்பமான நடிகை

ரஜினியின் ஒரு பேட்டியில் கூட ரஜினி எனக்கு பிடித்தமான நடிகையாக படாபட் ஜெயலட்சுமியை தான் கூறுவேன் என்றும் பதிலளித்திருந்தார். நல்ல திறமையான நடிகை. ஆனால் அவருடன் அதிகமான படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பில்லை என்று வருந்தி கூறினார். இப்படி பட்ட ஒரு திறமையான நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த காலத்தில் சினிமாவையே ஆட்டிப்படைத்தது.

jaya1_cine

jayalakshni

அவரின் தற்கொலைக்கு பின்னனியில் இருப்பது காதல் தான் என்று தெரியவந்தது. அவர் காதலித்தது யாரை என்று தெரிந்தால் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கும். எம்ஜிஆரின் அண்ணனான எம்ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சுகுமாரை தான். இவருன் ஒரு நடிகர் தான். எம்.சி.சுகுமாருன் படாபட் ஜெயலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : நயன்தாரா மாமியார் பேட்டிக்கு பின்னால் இத்தனை விஷயம் இருக்கா… அதுக்குன்னு இப்படியா!

சொத்துக்களை இழந்த சோகம்

சுகுமாருக்காக படாபட் ஜெயலட்சுமி தனது சொத்துக்களை எல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனால் சுகுமாரோ அதற்கு நன்றிக்கடனாக இருந்தாரா இல்லையா என்றால் இல்லை. இதனால் மன வேதனையுற்ற ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த தகவலை பயில்வான் ரெங்கநாதன் அவரின் யுடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.

jaya4_Cine

jayalakshmi

google news
Continue Reading

More in Cinema History

To Top