சினிமாவில் எப்பொழுதும் தாய்க்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் உண்டான பிணைப்பை தான் மிகவும் மிகைப்படுத்தி காட்டுவார்கள். அந்த வகையில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான அன்பையும் பாசத்தையும் மையப்படுத்தி ஏராளமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் தாயைப் பற்றிய நிறைய பாடல்களும் வந்திருக்கின்றன. ஆனால் நாங்களும் தாய்க்கு குறைச்சல் இல்லை என்பதை தன் பாசத்தின் மூலம் படங்களில் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் தந்தை கதாபாத்திரங்கள். அந்த வகையில் தந்தை பாசம் அதிகம் உள்ள திரைப்படங்களின் பட்டியலை தான் இப்போது காண இருக்கிறோம்.
அப்பா: குழந்தைகளை அவர்கள் போக்கிலே விட்டு அவர்கள் ஆசைக்கு மரியாதை கொடுத்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதே இந்த படத்தின் மையக் கருத்து. பெற்றோர்களின் ஆசையை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என்பதையும் இந்த படம் ஆணித்தரமாக உணர்த்தி இருக்கும் . இந்தப் படத்தில் ஒரு நல்ல நண்பர் மற்றும் அப்பாவாக நடித்திருப்பார் சமுத்திரக்கனி. இப்படி ஒரு அப்பா நமக்கும் கிடைக்க மாட்டாரா என படம் பார்த்த அத்தனை குழந்தைகளையும் ஏங்க வைத்த திரைப்படம் தான் இந்த அப்பா.
தங்கமீன்கள் : இந்தத் திரைப்படம் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவிற்கும் நிறைய ஆசைகளை சுமந்து கொண்டிருக்கும் ஒரு மகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பாச போராட்டம் தான் இந்த தங்க மீன்கள். மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் துடிக்கும் ஒரு அப்பாவின் அந்த நிலைமையை பார்த்து கண்ணீர் விடாதவர்கள் இல்லை. மிகவும் உணர்வுபூர்வமான உருக்கமான கதையை எளிமையாக படமாக்கி இருப்பார்கள் .அதுவும் கூடுதல் சிறப்பாக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல் அனைவரையும் உருக வைத்தது.
கனா: பெண் குழந்தை ஓரளவுக்கு படித்து முடித்ததும் அவளை திருமணம் செய்து கொடுத்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட தன் மகளை அவளின் ஆசைக்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் மைதானம் வரை கொண்டு செல்லக்கூடிய ஒரு அப்பாவின் அழகான பாசத்தின் பின்னணியில் வந்த படம் தான் இந்த கனா திரைப்படம். கிராமத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ பேச அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன் மகளின் ஆசையே தன்னுடைய கனவு என நினைக்கும் ஒரு அப்பாவின் ஆணித்தரமான பாச கதையை கொண்ட படம் தான் இந்த கனா.
வாரணம் ஆயிரம் : சூர்யாவை எப்படி ஒரு தந்தையாகவும் மகனாகவும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என முதலில் தயக்கம் கொண்ட தமிழ் சினிமா இந்த படம் வெளியான பிறகு அந்த தயக்கத்தையே முற்றிலும் பொடி பொடியாக உடைத்தது. தந்தை கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சூர்யா. பொதுவாக மகள் தந்தையிடமும் மகன் தாயிடமும் தான் அதிகமான அன்பையும் பாசத்தையும் பொழிவார்கள். ஆனால் அந்தக் கணிப்பை இந்த படம் முற்றிலுமாக தகர்த்தெறிந்தது.
இதையும் படிங்க : உன் இஷ்டத்துக்குலாம் பாட்டு போட முடியாது!.. எம்.எஸ்.வி ஆசையில் மண்ணை போட்ட கண்ணதாசன்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…
Nepotism: பாலிவுட்டில்…
மழை வருவதற்கு…
கடந்த தீபாவளிக்கு…