நான் அவருக்கு எழுதின பாட்டு.. சிவாஜிக்கு அதுதான் ஃபேவரைட்டு!.. வாலி சொன்ன தகவல்!…
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் முதல் சிம்பு வரை எல்லா காலத்திற்கும் பாடல்கள் எழுதும் திறமை உள்ளவர் என்பதால் இவரை வாலிப கவிஞர் வாலி என்று அழைப்பார்கள். கண்ணாதாசன் பீக்கில் இருந்தபோதே அவருக்கு போட்டியாக திரையுலகில் பல பாடல்களை எழுதியவர். அவ்வளவு ஏன்? கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியராகவும் வாலி இருந்தார்.
எம்.ஜி.ஆருக்கு வாலி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். சோகம், காதல் மட்டுமில்லாமல் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடும் பாடல்களையும், எம்.ஜி.ஆர் தன்னையே புகழ் பாடும் பாடல்களையும் எழுதியவர் வாலிதான். நான் ஏன் பிறந்தேன், நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, ஏன் என்று கேள்வி, அதோ அந்த அலைகள் போல, கொடுத்ததெல்லாம் கொடுத்தார், நான் அளவோடு ரசிப்பவன் என பல நூறு பாடல்களை எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதியுள்ளார்.
அதேபோல், வாலி சிவாஜிக்கும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இதுபற்றி ஒருமுறை பேசிய வாலி ‘நான் சிவாஜிக்கு பல படங்களுக்கு பாடல்களை எழுதியிருப்பது பலருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆருக்கு 63 படங்களுக்கு பாடல்கள் எழுதினேன். ஆனால், நடிகர் திலகம் சிவாஜிக்கு 66 படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன்.
நான் அவருக்கு எழுதிய பாடல்களில் எனக்கும், சிவாஜிக்கு மிகவும் பிடித்த பாடல் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ’ பாடல்தான். இப்பாடலில் இடம் பெற்ற சரணம் சிவாஜிக்கு மிகவும் பிடிக்கும். என்னை பார்க்கும்போதெல்லாம் அந்த பாடலை பாடித்தான் என்னை அவர் வரவேற்பார்’ என வாலி பேசியுள்ளார்.