வருத்தப்பட்டாரா சிம்பு..! அப்படி என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்..?

by Rohini |
simbu_main_cine
X

பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் ஹாட்ஸ்டாரில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கமல் இந்நிகழ்ச்சியை தொடரமுடியவில்லை.

simbu1_cine

நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பொழுது சிம்பு அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். காரசாரமான பேச்சாலும் புத்திசாலித்தனமான கேள்வியாலும் போட்டியாளர்களை திணற வைக்கிறார்.

simbu2_cine

எப்பயும் போல 17 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அனிதா சம்பத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன் வைத்து வருகிறார். எதையும் யோசிக்காமல் தன் முன் கோபத்தால் பட்டென்று பேசக்கூடியவர் அனிதா சம்பத்.

simbu3_cine

இந்த நிலையில் இன்னொரு போட்டியாளரான சுருதியிடம் அனிதா சம்பத் சிம்புவிற்கு என்ன தெரியும், கமல் சாராவது 5 சீசனையும் பார்த்து பேசுபவர். இவர் இந்த நிகழ்ச்சியை மட்டும் பார்த்து என்ன எப்படி பேசுவார் என எதிர்மறையான கருத்துக்களை பதிவு பண்ணிக் கொண்டு வருகிறார். இது சிம்புவின் காதுக்கு எப்பொழுது போகுமென்று தெரியவில்லை.

Next Story