சாவுக்கு கூட அவன் வரக்கூடாது!.. கங்கை அமரனை விரட்டிய இளையராஜா…

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் இப்போது வரை மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா.

அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. முதல் படத்தில் இருந்தே அவருக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

gangai amaran ilayaraja 2

gangai amaran ilayaraja 2

அதனைத் தொடர்ந்து 1980களில் முக்கால்வாசி படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார் என கூறலாம். அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வந்தன. இளையராஜா ஒருவரால் மட்டும் அவ்வளவு படங்களுக்கும் இசையமைக்க முடியவில்லை. அப்போது இளையராஜாவிற்கு பெரும் உதவியாக இருந்தவர் அவரது தம்பி கங்கை அமரன்.

கங்கை அமரனை விரட்டிய இளையராஜா:

கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது இளையராஜா இசையமைத்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் நான் இசை அமைத்தது என கூறியுள்ளார். ஒரே துறையில் இருவரும் இருந்ததாலோ என்னவோ அப்போதைய காலகட்டத்தில் இருவருக்கும் இடையே பெரும் சண்டை வெடித்தது. இதனால் கங்கை அமரனை வீட்டை விட்டு விரட்டினார் இளையராஜா.

கங்கை அமரனும் இளையராஜாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இளையராஜாவின் மனைவி காலமானார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த கங்கை அமரன் இளையராஜாவின் வீட்டிற்கு வந்தார்.

ஆனால் அப்போதும்கூட இளையராஜா கங்கை அமரனை அனுமதிக்கவில்லை அதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார் கங்கை அமரன். தனது தாய்க்கு பிறகு தன்னை நன்றாக பார்த்துக் கொண்டவர் தனது அண்ணிதான் அவரையே பார்க்க விட மாட்டார்கள் என்று அப்போதே கதறி அழுதுள்ளார் கங்கை அமரன். இந்த நிகழ்வை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பொடி பையன்… நான் பார்த்து வளர்ந்தவன் – விஜய்யை காக்க வச்சி ஆணவத்தில் ஆடிய வடிவேலு!

 

Related Articles

Next Story