
விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகவே ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டவர். தன்னால் என்ன உதவி முடியுமோ அதை எப்போதும் மக்களுக்கு செய்தவர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்போதும் இருந்தவர் இவர். அதனால்தான் அவர் அரசியலுக்கும் வந்தார்.
திரையுலகில் பலருக்கும் உதவி செய்திருக்கிறார் விஜயகாந்த். பலரையும் சினிமாவில் வளர்த்துவிட்டிருக்கிறார். விஜய்க்கு மார்க்கெட் இல்லாமல் இருந்தபோது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டதால் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். இந்த படம்தான் விஜயை பி மற்றும் சி செண்டர்களில் பிரபலப்படுத்தியது.
இந்நிலையில், பிரபல சண்டைக்காட்சி இயக்குனர் மற்றும் நடிகர் பெப்சி விஜயன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் அன்பு நிறைந்த ஒரு மனிதர். அவர் சாதாரண நபர் கிடையாது.. பிரச்சனை என்றால் யாராக இருந்தாலும் இறங்கி சண்டை போடுவார்.. அவர் ஒரு உண்மையான வீரன்.. யாருக்கும் பயப்பட மாட்டார்.. அதேநேரம் நேர்மைக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும் மட்டுமே பயப்படுவார்..
எனக்கு பெப்சில எந்த பிரச்சினை நடந்தாலும் முதல் ஆளா வந்துருவார். 85 ஏக்கர் இடத்தில் Ford கம்பெனி கார் நிறுத்திட்டாங்க.. நான் பிரச்சனை பண்ணேன். அடுத்த நாள் என்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்துட்டாங்க.. இதை தெரிந்து விஜயகாந்த் சார் நிறைய பேருக்கு கூட்டிட்டு வந்து நடுரோட்டில் உட்கார்ந்துட்டார்.. நீங்க வாங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்’ என சொன்னார்.. அதுதான் விஜயகாந்த்’ என கூறியிருக்கிறார்..