விஜயின் மெத்தனமான பேச்சு!.. சைலன்டா இருந்து பதிலடி கொடுத்த அஜித்!.. நாளுக்கு நாள் வலுக்கும் போட்டி..
நாளுக்கு நாள் விஜய்க்கு அஜித்திற்கும் நேரடியாக எந்தவித பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் அவர்கள் படத்தை பற்றிய அப்டேட்ஸ்களால் இருவரும் போட்டியாளர்களாக களத்தில் இருக்கின்றனர். இரண்டு தினங்களுக்கு முன் அஜித்தின் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது.
டிரெய்லர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு காட்சியில் தன்னை அயோக்கிய பையன் என்று அஜித் சொல்லியிருப்பார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாரிசு படத்தின் டிரெய்லரும் இருக்கும். அப்படி எதும் இல்லையென்றாலும் புதிதாக சேர்த்து டிரெய்லரை வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்தார்.
இதையும் படிங்க : இது ஃபேமிலி டைம்!.. அஜித் பொண்ணு இவ்ளோ வளந்துட்டாரா?!.. ஏகே ரீசண்ட் கிளிக்ஸ்…
இப்படி துணிவு வாரிசு படத்தினால் விஜய்க்கும் அஜித்திற்கு இருக்கும் ஆரோக்கியமான போட்டி ரசிகர்களால் வலுத்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் விஜய் வாரிசு படத்தின் ஆடியோ விழாவில் பேசிய பேச்சு அபத்தமானது என்றும் நகைச்சுவையானது என்றும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அதாவது தனக்கு போட்டி நான் தான் என்று தன்னுடைய பெயரை குறிப்பிட்ட விஜய் அஜித்தின் வளர்ச்சியை ஏளனமாக கருதிவிட்டார் போல. ரசிகர்களை அரவணைக்கும் விதத்தில் இருந்து செல்ஃபி எடுப்பது, ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைப்பது என்று ரசிகர்களின் இணைப்பிலேயே இருக்கிறார்.இந்த பக்கம் அஜித் ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்தே தள்ளி வைத்துக் கொண்டே வருகிறார்.
நீங்கள் உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என்று ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் அஜித். அப்படி பட்ட செல்வாக்கு உள்ள அஜித்தை உங்கள் இடக்கையால புறந்தள்ள முடியாது என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார் பிஸ்மி. மேலும் விஜயின் படங்கள் வெற்றி அடைந்திருக்கிறது, அவருடைய படங்கள் பிசினஸ் ஆகின்றன இப்படி எதுமே இல்லாமல் விஜய்க்கு நிகராக அஜித் இருக்கிறார் என்றால் எனக்கு போட்டி யாரும் இல்லை என்று சொல்வது விஜயின் மடத்தனமான பேச்சு என்று பிஸ்மி கூறினார்.