ரகசியமாக ஹோட்டல் நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள் – அட இத்தனை பேரா!..

Published on: July 14, 2023
JIIVAPBS
---Advertisement---

பல சினிமா பிரபலங்கள் நிரந்தரமான வருமானத்திற்காகவும், மார்கெட் போனால் என்ன செய்வது என்ற பயத்திலும் பல சைட் பிஸ்னஸ்களை செய்துவருகின்றனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்குக்கு இது பெற்றி தெரியாது. பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி என பலரும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர்.

அதே போல தான் பல தமிழ் சினிமா பிரபலங்களும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். சினமாவில் நிரந்தரமான வருமானம் கிடையாது. மேலும் எப்போது வேண்டுமானாலும் ஃபீல்டு அவுட்டாக வாய்ப்பிருக்கிறது. இதனால் சில சினிமா பிரபலங்கள் மிக உஷாராக ஹோட்டல் தொடங்கி நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதையும், அவர்கள் நடத்தும் ஹோட்டலின் பெயர்களையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரி

நடிகர் சூரி பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். இவர் மதுரையிலும், சென்னையும் அம்மா உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல்கள் மிகவும் பிரபலமானது என்றும் இதன் மூலம் இவர் பல லட்சம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கர்

priya
priya

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து, சீரியலில் நடித்து பின்பு சினிமாவில் கதாநாயகியாக ஆனவர். சமீபகாலமாக இவர் நடித்த எல்லா படங்களும் படுதோல்வி அடுந்துவருகிறது. எனவே, விரைவில் இவரின் மார்கெட் அவுட்டாகி விடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் உஷாராக Liams dinner என்ற ஹோட்டலை தொடங்கியுள்ளார்.  சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஹோட்டலின் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்,சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னையில் ஹோட்டல் தொடங்கியுள்ளார்.

கருணாஸ்

பல படங்களில் காமெடி நடிகராக நடித்த கருணாஸ், பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதன் பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் karunas naan என்ற பெயரில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். எனவே, சினிமாவும், அரசியலும் கைவிட்டால் கூட ஹோட்டலில் வரும் வருமானம் இருக்கும் என்று ஸ்மார்ட்டாக யோசித்து ஹோட்டல் நடத்தி வருகிறார் கருணாஸ்.

ஆர்யா

act6
aarya

சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ஆர்யா, சென்னை அண்ணா நகரில் சொந்தமாக sea shell என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். என்னதான் நன்றாக நடித்தாலும், பெரிய அளவில் நடிகர் ஆர்யாவின் படங்கள் வெற்றி பெருவதில்லை. சார்பட்டா பரம்பரைக்கு பிறகு இவரின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இதனால் தானோ என்னவோ, ஆர்யா ஹோட்டல் நடத்தி வருகிறார். 

ஜீவா

முற்றிலும் மார்க்கெட் இழந்துவிட்ட நடிகர் ஜீவா, சென்னையில் One mb என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். அவ்அப்போது நல்ல படங்களில் நடிக்கும் ஜீவா, பெரும்பாலும் சொதப்பலான படங்களை தேர்வு செய்து நடித்ததால், அவரின் சினிமா வாழ்க்கையே கேள்விகுறியாக தான்  உள்ளது. அடுத்து அவருக்கு பெரிதாக படவாய்ப்பு ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் அவருக்கு ஹோட்டல் மூலம் ஓரளவுக்கு நன்றாக வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.