நயன்தாராவின் பதிவுக்கு சமூக வலைதள பக்கங்களில் பல நடிகைகள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் யாரெல்லாம் என்பதை இதில் தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனை வெடித்து இருக்கின்றது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
இது ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த திரைப்படத்திலிருந்து தான் காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்திற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
இதையும் படிங்க: நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…
இவர்களின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வீடியோ தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. ரசிகர்கள் பலரும் எப்போதுதான் வீடியோ வெளியாகும் என்று கூறி வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் nayanthara beyond the fairy tale என்கின்ற பெயரில் வரும் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு டாகுமெண்டரி ஃபிலிமாக வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். இந்த ஆவண படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கின்றார். மேலும் netflix ott தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சியை வெறும் 3 நொடிக்கு இந்த படத்தில் பயன்படுத்தியதற்காக தனுஷ் பத்து கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றார். கடந்த இரண்டு வருடங்களாக நயன்தாரா தனுஷிடம் என்ஓசி கேட்டு போராடி வந்திருக்கின்றார். ஆனால் தனுஷ் என்ஓசி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து வந்திருக்கின்றார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த நடிகை நயன்தாரா இந்த சமூக வலைதள பக்கங்களில் மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் சினிமாவில் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு தனி பெண்ணாக இந்த இடத்திற்கு வந்திருக்கின்றேன். அதை உணர்த்தும் விதமாக எங்களது திருமண வீடியோவை ஒரு ஆவணமாக வெளியிடுவதற்கு முடிவு செய்தேன். நானும் ரவுடிதான் படத்தின் பாடல் ஒன்றை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி கேட்கின்றார். வெறும் மூன்று வினாடிக்கு நடிகர் தனுஷ் 10 கோடி கேட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
உங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பை நான் பெற்றுள்ளேன். அதற்கு நாங்கள் சட்டபூர்வமான வழியில் பதில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவரின் அறிக்கைக்கு சமூக வலைதள பக்கங்களில் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் பல நடிகைகள் நடிகை நயன்தாராவின் பதிவுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்த பல நடிகைகள் தனுசுடன் இணைந்து நடித்தவர்கள் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதையும் படிங்க: 10 கோடியா கேட்குறீங்க!.. ஃபிரியா பாருங்க!.. வீடியோவை பகிர்ந்து தனுஷை அசிங்கப்படுத்திய விக்கி!…
தனுசுடன் ஜோடியாக நடித்த நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, பார்வதி, நஸ்ரியா, அனுபாமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு பொருள் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது நடிகர் தனுஷின் இமேஜை டேமேஜ் செய்து இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…
நயன்தாராவுக்கு பணத்தால்…
Dhanush: தற்போது…
நடிகை நயன்தாரா…
வேட்டையன் திரைப்படத்துடன்…