தனுஷ் இயக்கி பாதியில் நின்று போன படம்!.. மிரண்டுபோன நடிகர்.. கஷ்டமெல்லாம் வீணாப்போச்சே!...

by prabhanjani |
dhanush srikanth
X

இதுவரை தனுஷ் பவர் பாண்டி படத்தை மட்டும் தான் இயக்கியுள்ளார் என்று தான் நாம் நினைத்திருப்போம். ஆனால் தனுஷ் இரண்டாவதாக ஒரு படத்தை இயக்கினார் என்றும் அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது என்றும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

d50

அந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பற்றி யாருக்குமே தெரியாது. முக்கால்வாசி எடுக்கப்பட்ட இந்த படம் பாதியில் கைவிடப்பட்டது. இந்த படத்தை தனுஷ், ஸ்ரீகாந்திற்காகவே எழுதி இயக்கினார். இந்த படத்தின் பணியாற்றிய ஸ்ரீகாந்த், தனுஷின் திறமையை பார்த்து மிரண்டுவிட்டதாக என்னிடம் கூறினார்.

ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பே இல்லாமல், ஒரு இயக்குநராக மட்டுமே படப்பிடிப்பில் இருப்பார், பழகுவார். மிகவும் சின்சியராக அற்பணிப்போடு பணியாற்றினார். இரவு 12 மணி வரை சண்டை காட்சி படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்தால், அதிகாலை 4மணிக்கெல்லாம் எழுந்து அவர் ரூமில் பூஜை செய்துகொண்டிருப்பார்.

dhanush

அவருக்குள் ஒரு பெரிய இயக்குநர் ஒளிந்திருக்கிறார். தனுஷ் இப்படி பட்ட ஒரு சிறந்த இயக்குநர் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாக செய்யாறு பாலு தெரிவத்துள்ளார். ஆனால் இந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த படம் வெளியாவதே சந்தேகம் தான்.

அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். அடுத்ததாக தனுஷ் டி50 படத்தை இயக்கப்போகிறார். அந்த படத்தில் தனுஷுக்குள் இருக்கும் இயக்குநரை நம்மால் பார்க்க முடியும் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..

Next Story