கவர்ச்சிக்கு நோ சொன்னதால் ஓரங்கட்டப்பட்ட நடிகைகள்.... யார் யார் தெரியுமா?
இப்போதுதான் படங்களில் ஹீரோயினே கவர்ச்சி காட்டியும் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டும் வருகிறார்கள். ஆனால் முன்பு அப்படி கிடையாது. ஹீரோயின் வேறு கவர்ச்சி நடிகை வேறு என இருந்தார்கள். அந்த வகையில் கவர்ச்சி காட்டுவதற்கென்று தனியாக இருந்த சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி உட்பட பல நடிகைகள் ஹீரோயின்களை விட ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தார்கள்.
அதனால் சில ஹீரோயின்களும் கவர்ச்சியில் இறங்கினார்கள். ஆனால் எவ்வளவு காசு கொடுத்தாலும், கவர்ச்சி காட்டமாட்டேன் என்று அடம் பிடித்த நடிகைகள் சிறிது காலத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தற்போது முற்றிலும் சினிமாவை விட்டே ஒதுங்கி உள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
1.நதியா - 80 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை நதியா. இவரது அழகும் துறுதுறு நடிப்பும் ரசிகர்களுக்கு பிடித்துபோகவே விரைவில் அவர்கள் மனதில் இடம்பிடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்ட வேண்டும் என கூறியதால், கவர்ச்சி படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல், விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது அம்மா கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.
2. சுவலட்சுமி - 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சுவலட்சுமி. முதல் படத்திலேயே தனது அழகால் ரசிகர்களை வசீகரம் செய்த சுவலட்சுமி கவர்ச்சி கேரக்டரில் நடிக்க விரும்பாததால் தொடர்ந்து குடும்பபாங்கான கேரக்டரில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் இவரின் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டு விலகி விட்டார்.
3. சங்கீதா - குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சங்கீதா தமிழ் மற்றும் மலையாளம் என கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படம் தான் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை உருவாக்கி கொடுத்தது. இவர் படங்களில் துளி கூட கவர்ச்சியை காண முடியாது. தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
4. இளவரசி - சம்சாரம் அது மின்சாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இளவரசி குடும்பபாங்கான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அதனால் தன்னை தேடி வந்த கிளாமர் கேரக்டரை மறுத்து ஹீரோயினுக்கு அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
5. ஸ்ரீதிவ்யா- வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே குடும்பபாங்கான பெண்ணாக நடித்து இளைஞர்களின் மனதில் குடியேறினார். தொடர்ந்து காக்கி சட்டை,மருது, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தொடர்ந்து குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீதிவ்யா திடீரென திரையுலகில் காணாமல போனார்.