படம் நல்லா இருக்குனு சொல்ல லஞ்சமா? பிரபல விமர்சகரின் முகத்திரையை கழித்த டாப் ஸ்டார்…

by Akhilan |
படம் நல்லா இருக்குனு சொல்ல லஞ்சமா? பிரபல விமர்சகரின் முகத்திரையை கழித்த டாப் ஸ்டார்…
X

Reviewer: சமீபத்திய சினிமாவின் வசூலை நிர்ணயிப்பது என்னவோ ஆன்லைன் விமர்சகர்கள் தான். அவர்கள் சொல்லும் விமர்சனத்தை வைத்தே சிலர் திரைப்படம் பார்க்க செல்வதால் தயாரிப்பாளர்களுடன் லஞ்ச பேச்சுவார்த்தை கூட நடப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

தமிழ் சினிமா தற்போது பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறது. வருடத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல சின்ன பட்ஜெட் திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்பெல்லாம் நேரடியாக திரையரங்குக்கு ரசிகர்கள் சென்றுவிடுவார்கள்.

இதையும் படிங்க: விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை!… அது எனக்கு ரொம்ப கஷ்டம் தான்… ஓபனாக பேசிய பிரசாந்த்…

ஆனால் தற்போது ரசிகர்கள் எந்த படத்தை பார்க்கலாம் என்பதை ஆன்லைன் விமர்சகர்கள் சொல்லும் விமர்சனத்தை வைத்து முடிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட்டிற்கு நிறைய விமர்சகர்கள் இருந்தாலும் பிரசாந்த், புளூசட்டை மாறன், சினிமா பையன் அபிஷேக், வலைப்பேச்சு டீம் ஆகியோர் பிரபல விமர்சகர்களாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் மீதும் நிறைய தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டை அடிக்கடி தெரிவிப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் மீது லஞ்ச புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்தி சினிமா உலகில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. விஜயின் வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்தவர் வித்யூத் ஜம்வால்.

இதையும் படிங்க: எவ்ளோ பெரிய ஹீரோனாலும் இந்த நடிகையின் ஷாட்தான் ஃபர்ஸ்ட்.. அந்தளவுக்கு ராசியான நடிகை யார் தெரியுமா?

ஆரம்பத்தில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த வித்யூத். சமீப காலமாக பாலிவுட் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது கிராக் திரைப்படம். ஆனால் இப்படத்தின் முதல் காட்சி ரிலீஸான சில நிமிடங்களிலேயே இந்தி விமர்சகர் இது ஒரு குப்பை படம் என விமர்சித்தார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வித்யூத், அந்த விமர்சகர் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும் அதை தான் தர முடியாது எனக் கூறியதால் தான் என்னுடைய படத்தை மோசமாக விமர்சித்தார் என ட்விட் செய்திருக்கிறார்.

மேலும் அந்த விமர்சகர் வித்யூத்தை ப்ளாக் செய்த ஸ்கிரீன்ஷாட்டையும் ஷேர் செய்திருக்கிறார். விமர்சகர்கள் இப்படி தொடங்கி இருக்கும் விஷயம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்கள் மற்ற நடிகர்கள் அமைதியாக இருக்கும்போது நீங்களாவது இந்த விஷயத்தில் வாய் திறந்து இருக்கீங்களே என அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லா செண்டர்லயும் ஹிட்டான அஜித் படம்.. விஜய் படத்தோட நிலைமை தெரியுமா? இவ்ளோ நாள் சொன்னது பொய்யா?

Next Story