வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர்கள் எடுத்த படங்கள்!.. பயம் காட்டிய சிகப்பு ரோஜாக்கள்!...
தமிழ்ப்பட உலகில் இயக்குனர்கள் தங்களது வழக்கமான பாணியில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட ஜானரில் படங்களை எடுத்துள்ளார்கள். அதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும். இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி என்று கூட சொல்லலாம். யார் யார், என்னென்ன படங்கள்னு பார்ப்போமா...
இயக்குனர் பாரதிராஜா கிராமிய கதைகளையே எடுப்பவர். அவர் ஒரு க்ரைம் திரில்லர் கதையை எடுத்தார். அது தான் சிகப்பு ரோஜாக்கள்.
அதே போல பாக்கியராஜ் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி எடுத்த படம் விடியும் வரை காத்திரு என்ற படத்தை எடுத்தார். அதற்கு முன்பு வரை காமெடி மற்றும் குடும்பப்பாங்கான படங்களைத் தான் எடுத்தார். ஆனால் இந்தப் படத்தில் அவரது வில்லத்தனமான ரோல் மக்களைக் கவரவில்லை என்றதால் அதுபோன்ற படங்களை அதன்பிறகு எடுக்கவே இல்லை.
இயக்குனர் ஷங்கர் எப்போதும் சமூகக் கருத்துகளை முன்வைத்து படம் எடுப்பவர். அவர் தனது ஜானரில் இருந்து விலகி எடுத்த படங்கள் ஜீன்ஸ் மற்றும் பாய்ஸ்.
இயக்குனர் சேரன் எப்போதும் குடும்பம் சார்ந்த சென்டிமென்ட் படங்களைத் தான் எடுப்பார். அவர் தனது வழக்கமான ஜானரில் இருந்து விலகி எடுத்து அசத்திய படம் ஆட்டோகிராப். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் குடும்பக் கதைகளில் தான் வித்தியாசத்தைக் காட்டுவார். அவர் முதன்முறையாக புதிய ஜானரில் எடுத்த படம் அவவை சண்முகி.
நடிகரும், இயக்குனருமான விசு எப்போதும் குடும்பப் பாங்கான கதைகளைத் தான் படமாக எடுப்பார். ஆனால் அவர் முற்றிலும் மாறுபட்ட ஜானரில் எடுத்த படம் சிதம்பர ரகசியம். காதல் கொண்டேன் படத்தை எடுத்த செல்வராகவன் புதிய பரிணாமத்துடன் எடுத்த படம் புதுப்பேட்டை. இதில் தனுஷையே வித்தியாசமாகக் காட்டியிருப்பார்.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் அரசியல் பின்னணி கொண்ட படம் தான் பெரும்பாலும் வரும். அவர் தனது ஜானரில் இருந்து விலகி வித்தியாசமாகக் கொடுத்த படம் தான் செம்பருத்தி. இந்தப் படத்தில் 10 பாடல்கள் போட்டு பட்டையைக் கிளப்பினார் இளையராஜா.
மணிவண்ணன் எடுத்த முற்றிலும் மாறுபட்ட படம் அமைதிப்படை. சூட்டிங் ஸ்பாட்டில் வைத்துத் தான் வசனங்களையே எழுதுவாராம். இதற்கு முன்பு வரை நூறாவது நாள் போன்ற ஸ்டைலில் தான் படம் பண்ணினாராம். அமைதிப்படைக்குப் பிறகு தான் அரசியல் படமாக எடுத்துத் தள்ளினார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடத்தல் சம்பந்தமான படங்களையே இயக்கி வந்தார். இவர் முற்றிலும் மாறுபட்ட படத்தை எடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் தனது ஒவ்வொரு படங்களையுமே வித்தியாசமான ஜானரில் தான் எடுத்து வருகிறார்.