Connect with us
goat

Cinema News

இதுல கிரிக்கெட்! அங்க ஃபுட் பாலா? ‘கோட்’ க்ளைமாக்ஸ இந்த படத்துல இருந்துதான் சுட்டுருக்காரா?

Goat Movie: விஜய் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் கோட். இந்த படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நான்கு நாட்களில் 400 கோடி என்று அளவில் வசூலை எட்டி வருவதாக சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படி ஒரு கமர்சியல் பேக்கேஜ் உள்ள திரைப்படத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

மாநாடு திரைப்படம் எப்படி விறுவிறுப்பான ஒரு ஸ்கிரீன் ப்ளேயில் பண்ணி இருந்தாரோ அதே மாதிரியான ஒரு விறுவிறுப்பான ஸ்கிரீன் ப்ளே தான் கோட் திரைப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட் பிரபு. அதனால் படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பது போவதே தெரியவில்லை.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாருடன் இணைந்த ரியல் ஸ்டார் கதை தெரியுமா? படா மாஸா இருக்கே!

அந்த அளவுக்கு படம் வேகமாக நகர்ந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். விஜயைத் தவிர படத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கு தேவையான முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் திரையரங்கில் பாடல்களை கேட்கும் போது அந்த விமர்சனங்களை எல்லாம் மறக்கும் அளவுக்கு திரையில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பாடலுமே ரசிக்கும்படியாகவே இருக்கிறது. அதிலும் மட்ட பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது என்றே சொல்லலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழு ஆக்க்ஷன் காட்சிகளாகவே அமைந்திருக்கிறது. அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாஸ் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: OTT-க்கு வரும் GOAT… ரன் டைம் ‘இத்தனை’ மணி நேரமா?

ஒரு பக்கம் ஐபிஎல் மேட்ச் நடைபெற இன்னொரு பக்கம் மகனுக்கும் அப்பாவுக்கும் இடையேயான அந்த ஒரு சண்டை காட்சியை விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் ஜெமினி மேன் படத்தின் ரீமேக் தான் கோட் திரைப்படம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால் ரீமேக் கிடையாது. அந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் கோட் திரைப்படத்தை எடுத்திருக்கிறோம் என வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஆனால் இப்போது கோட் படத்தில் வரும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை வேறொரு படத்தில் இருந்து வெங்கட் பிரபு சுட்டு இருக்கிறார் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: இப்படிச் சூடு… வேட்டையன் மனசிலாயோ சிங்கிள்… மலேசியா வாசுதேவன் வாய்ஸ் கொண்டு வந்த காரணம்

2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபைனல் ஸ்கோர் என்ற படத்தின் கிளைமேக்ஸ் காட்சிதான் கோட் படத்தின் கிளைமேக்ஸ் கட்சியாகவே தெரிகிறது. எப்படி கோட் படத்தில் விஜய் பைக் எடுத்து ஸ்டேடியம் உள்ளே ரவுண்டு வருவாரோ அதைப்போல இந்த பைனல் ஸ்கோர் படத்திலும் ஹீரோ பைக்கை எடுத்து முழுவதுமாக சுற்றிக் கொண்டே வந்து எதிராளிகளை துவம்சம் செய்வது போல காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் கோட் படத்தில் ஐபிஎல் மேட்ச் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த பைனல் ஸ்கோர் திரைப்படத்தில் ஃபுட்பால் மேட்ச் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அச்சு அசல் இந்த பைனல் ஸ்கோரின் கிளைமேக்ஸ் காட்சியைத் தான் கோட் படத்தில் வைத்திருக்கிறார் என இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/TrollywoodOffl/status/1832751109171245311

google news
Continue Reading

More in Cinema News

To Top