ஊர் ஊராய் சுற்ற கிளம்பிய ஹீரோ.! இவருக்கு வேறு வழி தெரியல போல.!

by Manikandan |
ஊர் ஊராய் சுற்ற கிளம்பிய ஹீரோ.! இவருக்கு வேறு வழி தெரியல போல.!
X

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் FIR. இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் இருந்தார். இப்படத்தை மனு ஆனந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கினார்.

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருந்தார். இப்படத்திற்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது விஷ்ணு விஷாலின் மார்க்கெட்டில் அதிக கலெக்சனை இந்த திரைப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதனை அதிகப்படுத்த தயாரிப்பாளர் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு பழைய முடிவை எடுத்துள்ளார். அதுதான் படக்குழுவின் கடைசி ஆயுதம் என்று கூட கூறுவார்கள்.

இதையும் படியுங்களேன் -தயாரிப்பாளருக்கு கட்டளையிட்ட விஜய்.! சென்னையில் தீவிர பணியில் படக்குழு.!

அதாவது தனது திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டு நேரில் சென்று பார்ப்பது. அப்படி அறிவிக்கையில், அந்த நடிகரை பார்க்க கூட்டம் வரும். அது அப்பட வசூல் அதிகரிக்க ஓரளவு கைகொடுக்கும்.

அதன்படி, நாளை முதல் நாளாக கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கிற்கு நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்ப்பதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்த நாளன்று மற்ற திரையரங்கிற்கு செல்ல முடிவு எடுத்துள்ளாராம். பார்க்கலாம் இந்த யோசனை தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலுக்கு எந்தளவுக்கு கை கொடுக்கிறது என்று.

Next Story