கேரளாவில் அடுத்த விக்கெட்!.. நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!..

by சிவா |   ( Updated:2024-09-03 14:14:51  )
nivin
X

#image_title

Nivin pauly: பாலியல் புகாரில் மலையாள நடிகர்கள் சிக்கி வருவது கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமா உலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆராய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியும் அதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், அதில் என்னென்ன சொல்லி இருந்தது என்கிற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில்தான், அதில் இருந்த தகவல்கள் சமீபத்தில் வெளியே கசிந்து கேரள திரையுலகை அசைத்து போட்டது. நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, பாபுராஜ், முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, எடவேல பாபு மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மீது திரையுலகை சேர்ந்த சில பெண்கள் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அம்மா என அழைக்கப்படும் கேரள நடிகர் சங்கத்தில் தலைவர் மோகன்லால் மற்றும் பலரும் தங்களின் பதிவியை ராஜினாமா செய்துவிட்டனர். நடிகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததற்கு நடிகை பார்வதி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிவின்

நிவின்

ஆனால், விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் என்ன சொல்ல முடியும் என சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார் மோகன்லால். ஒருபக்கம், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி போல ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், பிரேமம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நிவின் பாலியும் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியிருக்கிறார். பட வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி வெளிநாட்டில் வைத்து தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

இதன்பேரில் எர்ணா குளத்தில் உள்ள காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பாலியல் புகாரில் முக்கிய நடிகர்கள் சிக்கி வருவது கேரள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story