‘லியோ’ படத்தில் முதல் 10 நிமிடம்! கடைசி 7 நிமிடம் – யார் வராங்க தெரியுமா? ஹைப்பை ஏற்படுத்தும் லோகிபாய்

Published on: October 18, 2023
leo
---Advertisement---

Leo LCU:  நாளை வெளியாகிறது லியோ திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் படம் வெளியாகும் நிலையில் ரசிகர்களிடையே ஒரு பரபரப்பு இருந்து கொண்டு வருகின்றது. லோகேஷின் படம் என்பதையும் தாண்டி சமீபகாலமாக விஜய் மீது இருந்த சர்ச்சையும் இந்தப் படத்தின் ஹைப்பிற்கான காரணமாக அமைந்தது.

ஒரு பக்கம் விஜயின் அரசியல் வருகை, ஒரு பக்கம் ரஜினி விஜய் மோதல் குறித்த பிரச்சினைகள் என நாளுக்கு நாள் விஜயை பற்றியே பேசி பேசி லியோ படத்திற்கு தானாகவே ஒரு ப்ரோமோஷனை ஏற்படுத்தி விட்டார்கள். அதுதான் இந்தளவுக்கு எதிர்பார்ப்பிற்கான காரணமாக அறியப்படுகிறது.

இதையும் படிங்க: 16 வயதில் ராஜ்கிரண் எடுத்த முடிவு!. விஜயகாந்துக்கு முன்னாடியே அப்படி யோசிச்ச மனுஷன் இவர்தான்!…

இதற்கிடையில் இதுவரை வாயை திறக்காத லோகேஷ் கடந்த 3 நாள்களாக அவர் கொடுத்த பேட்டியால் இன்னும் லியோ படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிறவைத்துவிட்டது. லோகேஷ் மட்டும் லியோ படத்தை பற்றி 70 மணி நேரம் மொத்தமாக பேட்டி கொடுத்திருக்கிறாராம்.

ஆனால் இதுவரை பொத்தி பொத்தி மறைத்திருந்த ரகசியத்தை ஒரு வினாடியில் சுக்கு நூறாக்கி விட்டார் உதய நிதி. படம் கண்டிப்பாக LCU தான் என சின்னதாக ஒரு டேக் செய்து அம்பலப்படுத்திவிட்டார். ஆனால் வந்த செய்திகளின் படி படத்தில் சிம்புவோ, தனுஷோ, ராம்சரணோ கேமியோலாம் இல்லையாம்.

இதையும் படிங்க : ஏற்கனவே ஆடிய ஆட்டம் போதாதா? மீண்டும் அஜித்துடன் மல்லுக்கு நிக்கும் அந்த நடிகர் – வேகமெடுக்கும் ‘விடாமுயற்சி’

அதுமட்டுமில்லாமல் படத்தில் கடைசி 7 நிமிட காட்சியில் ரோலக்ஸ் வந்த மாதிரி லியோவில் தனுஷ் வருகிறார் என்ற செய்தியெல்லாம் வந்தது. ஆனால் அதுவும் உண்மையில்லையாம். கடைசி 7 நிமிடக் காட்சியில் கமலின் வாய்ஸ் ஓவர் மட்டும்தான் கேட்குமாம். அதே போல் முதல் 10 நிமிடக்  காட்சியை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க என்று லோகேஷ் கூறியிருந்தார். அதுதான் LCUவுக்கான ஆரம்பக் காட்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.