கோட் படத்தின் முதல் 60 செகண்ட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? புது புது அப்டேட் கொடுத்த பிரேம்ஜி
Goat : வரும் 5ம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தைப் பற்றி புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார் நடிகர் பிரேம்ஜி. இந்த படத்தில் பிரேம்ஜி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது சினேகாவுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பிரேம்ஜி.
அதனால் வயதான விஜயை மாமா என்று தான் அழைப்பதாகவும் இளமையான விஜய் என்னை மாமா என்று அழைப்பார் என்றும் பிரேம்ஜி கூறி இருக்கிறார். மேலும் படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் படத்தில் நடித்த நடிகர்களை அழைத்து ஒரு பிரஸ்மீட் நடக்க இருப்பதாகவும் பிரேம்ஜி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை விட்டு கொடுக்காமல் பேசிய விஜயகாந்த்… எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கேள்விதான்!
மேலும் படத்தை நான் ஐந்து முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் என்றும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதல் 60 செகண்ட்ஸ் ஒரு பெரிய கூஸ்பம்ஸ் ரசிகர்களுக்கு ஏற்படும். அதாவது லட்சக்கணக்கான பேர் கூடிய ஒரு அரங்கத்தின் நடுவே தோனி நடந்து வரும் பொழுது ரசிகர்களின் ஆக்ரோஷம் எப்படி இருக்குமோ அதுபோல இந்த படத்தில் முதல் 60 செகண்ட் ரசிகர்களின் அலறல் சத்தம் கண்டிப்பாக கேட்கும்.
அதை பார்ப்பதற்காகவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என பிரேம்ஜி கூறி இருக்கிறார். சர்ப்ரைஸ்க்கு மேல் சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருக்கும் என்றும் யாரும் எதிர்பார்க்காத சில ட்விஸ்ட்களும் இந்த படத்தில் இருப்பதாகவும் பிரேம்ஜி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: Good Bad Ugly: அஜித்துடன் ‘டூயட்’ பாடப்போறது இவங்கதானாம்!
அதுமட்டுமல்லாமல் கோட் திரைப்படத்தில் இளையராஜாவின் ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்களாம். அதை ரீமிக்ஸ் செய்தது யுவன் சங்கர் ராஜாவும் பிரேம்ஜியும் தானாம். அந்தப் பாடலும் மிக நன்றாக வந்திருப்பதாக கூறி இருக்கிறார். அதாவது படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியில் இந்தப் பாடல் வருவதாக பிரேம்ஜி கூறி இருக்கிறார்.
மேலும் படத்தின் ஓபனிங் சாங் விசில் போடு பாடலை டைட்டில் கார்டிலும் அதை வேகமான ஸ்பீடில் ரீமிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறாராம் பிரேம்ஜி. இப்படி பல சர்ப்ரைஸ்களை இன்று பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் பிரேம்ஜி.
இதையும் படிங்க: ‘கோட்’க்கு ஓகே சொல்ல தளபதி எடுத்துக்கொண்ட நேரம்?