Connect with us
prabhu

Cinema News

பாதியிலேயே விட்டுப் போன அஜித்! அதுல நான் நடிப்பதா? உதறித்தள்ளிய பிரபுதேவா – படமோ சூப்பர் ஹிட்

சினிமாவில் என்ன எப்போ வேண்டுமென்றாலும் நடக்கலாம். இன்று இருப்பவர் நாளை இருப்பதில்லை. அதை போலதான் சினிமாவும். ஒரு படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் திடீரென நடிகரை மாற்றுவது இயக்குனரையே மாற்றுவது என்பதெல்லாம் நடந்திருக்கிறது. அதை போல் தான் அஜித் நடித்த படத்திலும் நடந்திருக்கிறது.

prabhu1

prabhu1

காதல் கோட்டைக்கு பிறகு அஜித்தின் மார்கெட் வெகுவாக உயர்ந்த சமயம். ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு அஜித்தும் விஜயும் மீண்டும் ஒன்றாக நடிக்க இருந்த படம் நேருக்கு நேர் திரைப்படம் . மணிரத்தினம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு 10 நாள்கள் அஜித் கலந்து கொண்டு நடித்தார்.

இதையும் படிங்க : கொளுத்திப் போட்ட தீ பத்திக்கிட்டு எரியுது! பொட்டியை தூக்கிட்டு பறந்த மிஷ்கின் – ஆடிய ஆட்டமெல்லாம் என்னாச்சு?

ஆனால் அதன் பிறகு அவரால் அந்தப் படத்தில் தொடரமுடியவில்லையாம். அப்போது அஜித்துக்கு பர்ஷனலாக சிலபல பிரச்சினைகள் இருந்ததாகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும் சில தகவல்கள் வெளிவந்தது. அதோடு மணிரத்தினமும் சுஹாசினியும் அஜித்தை நெருக்கடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

prabhu2

prabhu2

அதன் காரணமாகவே அந்தப் படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டாராம். விஜய் இருக்க அவருக்கு இணையாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தது. முதலில் பிரசாந்தை நடிக்க வைக்க கேட்டிருக்கின்றனர். ஆனால் பிரசாந்த் அப்போது ஜீன்ஸ் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாராம்.

அதன் பிறகே பிரபுதேவாவை அணுகியிருக்கின்றனர். ஆனால் பிரபுதேவாவோ ஏற்கெனவே வேறொரு நடிகர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு வந்தவர்தான் நடிகர் சூர்யா. ஆனால் முதலில் சிவக்குமாரும் சூர்யாவை நடிக்க விட மாட்டேன் என்று தான் சொல்லியிருக்கிறார். எப்படியோ விஜயுடன் இணைந்தார்.

prabhu3

prabhu3

அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் சிம்ரன், ஒரு பக்கம் கௌசல்யா என படம் முழுவதும் இளமை துள்ளலோடு செம ஜாலியாக எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க : இதெல்லாம் ஒரு நடிப்பா? செல்வமணியை செவுல்லயே விட்ட பானுமதி – யாரையும் விடாது போல இந்தம்மா

google news
Continue Reading

More in Cinema News

To Top