விஜய்சேதுபதி நடித்த படத்தில் முதலில் டிக் ஆனவர் அஜித்தா? இயக்குனரே சொன்ன சீக்ரெட்
Vijaysethupathi Ajith:விஜய் சேதுபதி நடித்த ஒரு படத்தின் கதை முதலில் அஜித்துக்காக எழுதப்பட்டது என இயக்குனர் சீனு ராமசாமி கூறி இருக்கும் செய்திதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதியை முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவரே சீனு ராமசாமி தான்.
அவரது இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து மூன்று படங்களில் சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி.
இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..
விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. மூன்றாவது படமான மாமனிதன் திரைப்படம் ஒரு வாழ்வியல் எதார்த்தத்தை உள்ளடக்கிய திரைப்படமாக அமைந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை பெறவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் அந்த படத்தில் எப்பவும் போல விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வழங்கி இருப்பார். இந்த நிலையில் மாமனிதன் திரைப்படத்தின் கதையை முதலில் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதினேன் என சீனு ராமசாமி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: யோகிபாபுவால் ஒரு வீடே போச்சு! இந்த ஆதாரம் போதுமா? வேதனையில் தயாரிப்பாளர்
எந்த ஒரு படத்தை ஆரம்பித்தாலும் முதலில் ஒரு நடிகரை வைத்து தான் ஆரம்பிப்போம். ஆனால் அது அப்படியே மாறி வேறொரு நடிகர் உள்ளே வருவது வழக்கமான ஒன்று என கூறியிருக்கிறார் சீனு ராமசாமி. மேலும் அவர் கூறும் போது அஜித்தின் உருவம், அவருடைய மென்மையான உரையாடல், அன்பை அவர் கண்ணில் காட்டுகிற விதம், பல படங்களில் அவருடைய ஹஸ்கி வாய்ஸில் உருக்கத்தை வெளிப்படுத்தும் விதம் இவையெல்லாம் வைத்து தான் இந்த மாமனிதன் திரைப்படத்தின் கதையை அஜித்தை வைத்து எடுக்கலாம் என நினைத்து எழுதினேன் என கூறி இருக்கிறார் சீனு ராமசாமி.